12-04-2005, 01:08 PM
மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் மட்டும் பண்டாரநாயக்கா குடும்பத்தை தலையெடுக்க விடமாட்டார். இதைவிட எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சித் தலைவராக வருவதற்கும் மகிந்தவிற்கு சந்தர்ப்பமுள்ளது. அப்படி வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அத்துடன் ஐ.தே.கட்சியும் எனி அநுராவைக் கணக்கிலெடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆதலால் இப்படி இடைக்கிடை அறிக்கைகள் மூலமாகவே தனது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டியது தான்.ஜே.வி.பி பற்றிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே பொதுவாகவே அரசியல்வாதிகளின் கருத்துக்கள் காலநிலை போன்றதே. எப்ப என்ன நடக்கும் என்று கூறமுடியாது.

