Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். கோண்டாவிலில் கிளைமோர் தாக்குதல்: 6 இராணுவத்தினர் பலி
#1
யாழ். கோண்டாவிலில் கிளைமோர் தாக்குதல்: 6 இராணுவத்தினர் பலி- 2 பேர் படுகாயம்!!
[ஞாயிற்றுக்கிழமை, 4 டிசெம்பர் 2005, 14:08 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உள்ள திருநெல்வேலி விவசாய பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 2 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

அச்சுவேலி 511 ஆவது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்திலிருந்து யாழ். நகரிலுள்ள 513 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு இவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இராணுவத்தினர் பயணம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரம் கிளேமோர் குண்டொன்றில் சிக்கி தூக்கி வீசப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

http://www.eelampage.com/index7.php?cn=22234
" "
Reply


Messages In This Thread
யாழ். கோண்டாவிலில் கிளைமோர் தாக்குதல்: 6 இராணுவத்தினர் பலி - by cannon - 12-04-2005, 10:22 AM
[No subject] - by cannon - 12-04-2005, 10:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)