12-04-2005, 02:17 AM
தமிழ்ச்சினிமாவில் இருக்கும் அவலம் என்னவென்றால், யாரும் தொடர்ச்சியாக நல்லதைச் செய்வதில்லை. பலர் தொடங்கும்போது பெரிய எதிர்பார்பைத் தந்துவிட்டு பிறகு கோமாளித்தனமா காரியங்களைச் செய்வர். பாரதிராசா தொடக்கம் தங்கர் பச்சான் வரை இது பொருந்தும். பாலுமகேந்திரா கொஞ்சம் அதிகம் தாக்குப்பிடித்தார் என்று சொல்லலாம்.
கொடி பறக்குது, கேப்டன் மகள், தாஜ்மகால் போன்ற படங்களை, தன் பணப்பையை நிரப்புவதற்காக மட்டுமே பாரதிராசா எடுத்தார் என்பது தெளிவு.
கமல் நடிகராக மட்டும் சம்பந்தப்பட்ட படங்களில் பதினாறு வயதினிலேயும் மூன்றாம் பிறையும் முக்கியமான படங்கள்.
இயக்குநர்களாக நிரந்தர நம்பிக்கையைத் தருபவர்கள் என்றால் சேரனும் கமலும் தான்.