Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசிய நினைவெழுச்சி நாள் 2005
#12
இன்று அதாவது 3,மார்கழி,2005 நெதர்லாந்தில் உத்திறெஹ்ற் நகரில் மாவீரர் நாள் 2005 வெகு சிறப்பாக நினைவு கூறப்பட்டது, சுமார் 1500லிருந்து 2000க்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தார்கள்,மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டது, ஆசனங்கள் போதாமையால் (எதிர்பார்த்ததை விட கூடுதலாக வந்தமையால்) சுமார் 500க்கும் அதிகமான மக்கள் நிண்ட வாறே நிகழ்ச்சிகளை காணவேண்டி வந்தது,

மதியம் 14.00 மணி அளவில் தமிழீழ தேசியகொடி ஏற்றுதலோடு ஆரம்பித்து, மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, மாவீரர்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நெதர்லாந்து தமிழ் அமுதம் இசைகுழுவினர் மாவீரர் நினைவு பாடல்களை தந்தார்கள், அதன் பின் இடையிடையே, எழுச்சி நடனம், தமிழீழம், மாவீரர் பற்றிய சிறுவர் உரைகளும் இடம்பெற்றது, அதனை தொடர்ந்து வன்னிமாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் அவர்களின் உரை இடம்பெற்றது, அவரின் உரையில் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக கடைசி நிதியாக பாரிய பங்களிப்பினை செய்யுமாறும், அதனை சில வருடங்களின் பின் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்தார்,

அதனை தொடர்ந்து, "விடுதலைப்பேரொழி" புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மீண்டும் எழுச்சி நடனம், சிறுவர் பேச்சு, ஆகியன இடம்பெற்றது, அத்துடன் ஒரு நாடகமும் இடம்பெற்றது, அதன் பின் மாவீரர் நினைவாக நடாத்தபட்ட விளையாட்டுப்போட்டிகளில் வென்ற கழகங்களுக்கும், அணி வீரர்களுக்கும் பரிசு அளித்து கெளரவிக்கப்பட்டார்கள், பின் தேசியகொடி இறக்கும் வைபத்தை தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் இரவு 21.00 மணிக்கு வழமையாக நடைபெற்று முடிந்த மாவீரர் நினைவு கூறும் நாளைப்போன்று இம் முறையும் எதுவித இடையூறுகள், பிரச்சினைகள் இன்றி நிறைவடைந்தது. Idea
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 11-27-2005, 11:42 AM
[No subject] - by sri - 11-27-2005, 08:16 PM
[No subject] - by sri - 11-27-2005, 09:37 PM
[No subject] - by Thala - 11-28-2005, 12:39 AM
[No subject] - by Mathan - 11-28-2005, 01:53 AM
[No subject] - by Thala - 11-28-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 11-28-2005, 02:13 AM
[No subject] - by Aravinthan - 11-28-2005, 02:32 AM
[No subject] - by ஜெயதேவன் - 11-28-2005, 10:47 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:02 PM
[No subject] - by selvanNL - 12-03-2005, 11:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)