Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கஸ்தூரிமான்
#1
<img src='http://www.kumudam.com/kumudam/301105/pg5-t.jpg' border='0' alt='user posted image'>

<b>ஒரு பெண் நினைத்தால், எந்த ஓர் ஆணின் வாழ்க்கையையும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டமுடியும் என்ற பாஸிட்டிவ் ஸ்டோரி. அதுவும் ரொம்ப டீஸண்டாக எடுத்திருப்பதற்காக, டைரக்டர் லோகித்தாஸைப் பாராட்டியே ஆகவேண்டும்.</b>

ரொம்பநாள் கழித்து ஓரு ஹீரோயின் சப்ஜெக்ட். கேரக்டராக அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார் மீராஜாஸ்மின். இத்தனை நாளும் இவ்வளவு நடிப்பை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள் சேச்சி?

அக்கா கணவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் போதாகட்டும், பணப்பற்றாக்குறை இருந்து அதை வெளிக்காட்டாமல் உற்சாகமாக நான்கு வீடுகளில் நர்ஸாகப் பணிபுரிந்து, அந்தப் பணத்திலேயே ஹீரோவுக்கு ஃபீஸ் கட்டுவதாகட்டும், பிரசன்னா தன் காதலைச் சொல்லும்போது, ஆதுரமாய்ச் சாய்ந்து கொள்வதாகட்டும், அக்காவின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில், அரிவாளால் அக்கா கணவனைக் கொத்திச் சாய்ப்பதாகட்டும், மீரா_ஜாஸ்மினாக மணக்கிறார். கைகளை விரித்துக்கொள்ளுங்கள் மீரா, விருது நிச்சயம்.

அனைவரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் படத்தில் கொஞ்ச நேரமே வரும் ஒரு பயங்கரக் கிழவி. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, அட்டைக்கரியாக, ஆங்காரமாய்க் கத்தியபடி கலக்குகிறாரே சூப்பர்ப்.

அழகிய தீயே பிரசன்னா, அழகாகச் செய்திருக்கிறார். நடையடி நாகராஜனாக வரும் ஷம்மி, மாட்டு கன்னையனாக வரும் சுபகுணராஜன் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

<b>இசை இளையராஜாவா? தாலாட்ட, வருவாளா பாடலையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்தினால் எப்படி?</b>

வசனம் ஜெயமோகன். சில இடங்கள் பளீர். சில இடங்கள் வெளீர்.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாக ஓடிய படமாம். ஆனால், நம் ஊருக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றி, மலையாள வாசனை அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அழகிய மான்தான். ஆனால் கால் ஒடிந்த!

<b>இவ்வளவு நாளாக இந்த நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்?</b>

(சிரிக்கிறார்) லோகித்தாஸ் சாதாரண களிமண்ணையும நடிக்க வைத்துவிடுவார். என்னிடம் கதைக்கு என்ன தேவையோ அதைக் கேட்டார். நானும் அவர் எதிர்பார்ப்பிற்குச் செய்திருக்கிறேன்.

<b>ஒரு கிழவி கதாபாத்திரம் வருகிறது. சும்மா பின்னிவிட்டார். யார் அந்த கிழவி?</b>

ஓ. அவரா! உங்களின் பாராட்டைக் கேட்டால் நிச்சயம் சந்தோஷப்படுவார். அவர் பெயர் குழபுழி லீலா. நாடக நடிகை. நிறைய மலையாளப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர் பண்ணியிருக்கிறார். மலையாள கஸ்தூரிமானிலும் அவர்தான் நடித்தார். அப்போதும் அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. விஷயமுள்ள பெண்மணி.

படத்தில் காமெடியே இல்லை.

லோகித்தாஸ் மிகப் பெரிய டைரக்டர். ஐம்பத்தாறு படங்களை இயக்கியிருக்கிறார். எந்தப் படத்திலும் காமிக் டைப் காமெடியில்லை.

<b>படத்தில் நிறைய மலையாள முகங்கள் தெரிகிறதே?</b>

ஏன் முகங்களைப் பார்க்கிறீர்கள்! எந்த கேரக்டரில் எப்படி நடிக்கிறார் என்று மட்டும் பாருங்கள். சினிமாவிற்கு மொழியோ, இந்த முகம், அந்த முகம் என்ற இலக்கணமெல்லாம் கிடையாது. கதையும், கதாபாத்திரமும்தான் பேசும். இந்தப் படத்தில் எல்லாம் முழுதாகப் பொருந்தியிருக்கிறது.

நன்றி: குமுதம்
Reply


Messages In This Thread
கஸ்தூரிமான் - by AJeevan - 12-03-2005, 10:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)