Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குனர் பாரதிராஜா
#8
Quote:தகவலை உர்ஜிதம் செய்தமைக்கு நன்றி வசம்பு.
மேலும் காட்சிகளை அமைப்பதில் மட்டுமல்ல ஒளிப்பதிவிலும் முக்கிய பங்கு வகித்த நிவாஸ் ஒரு கொடையாக அன்று பாரதிராஜாவுக்கு கிடைத்தார்.

அது ஒரு மாபெரும் உந்து சத்தியாக பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது எனலாம்.
<span style='font-size:21pt;line-height:100%'>
<b>மேலும் தகவல்கள்:-</b>
பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை.

பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வரை, தமிழ்த் திரை கிராமங்கள் அரங்குகளில் நிர்மாணிக்கப்பட்டன. சில சமயங்களில் வெளியூர்களில் படமாக்கப்பட்டாலும், அவை எப்போதும் பச்சை பசுமையுடன் காட்சி அளித்தன. கிராம மக்களின் உணவுப் பழக்கங்கள், மக்களின் பெயர்கள், உறவு முறைகள், கிராமத்து மக்கலின் வேலைகள், கூலி விவரங்கள், மத நம்பிக்கைகள், அவர்களுடைய இசைக் கருவிகள், திருவிழாக்கள் போன்றவை, பாரதிராஜா திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பாக இடம் பெற்றதே இல்லை என்று சொல்லலாம். கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலே, செயற்கையாக எழுதப்பட்ட காட்சிகள், ஆழமான வசனத்தாலும், நல்ல நடிப்பினாலும் வெற்றி பெற்று, கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற செயற்கையான பிம்பத்தை ஏற்படுத்தின.

இதை முதன் முதலாக உடைத்தெறிந்து, நிஜ கிராமத்தைப் படம் பிடித்தவர் பாரதிராஜா.

கிராமப் பின்புலத்தை யதார்த்தமாக காட்டியதால் மட்டுமே பாரதிராஜா வெற்றிகரமான இயக்குனராக மிளிர்ந்தார் என்று சொல்லமுடியாது. பாரதிராஜாவின் திரைப்படங்களை விடவும் வெகுயதார்த்தமான கிராமப் பின்புலத்தைக் கொண்ட , கல்லுக்குள் ஈரம் (1980) திரைப்படம், வெற்றி பெறவில்லை என்பதுடன், நிவாஸ் அதன் பின் வெகுகாலத்துக்கு திரைப்பட முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் திரையுலகச் சாதனைகளை நாலைந்து காலகட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

பாரதிராஜாவின் ஆரம்ப காலட்டம், ஐந்து வெற்றிப்படங்களை உள்ளடக்கியது. 16 வயதினிலே ( 1977) , கிழக்கே போகும் ரயில் ( 1978) , புதிய வார்ப்புக்கள் (1979) , போன்ற கிராமத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், நிறம் மாறாத பூக்கள் (1979) , சிவப்பு ரோஜாக்கள் (1978) போன்ற நகரத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், அதனளவிலேயே, கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்ற எல்லா முக்கிய அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, வெற்றிப் படங்களாக அமைந்தன. பாரதிராஜாவின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கிய காரணம், சிறந்த கதையைத் தேர்ந்தெடுப்பதும், அதை அழகாகக் காட்சிப்படுத்துதலும் தான். [16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் தவிர்த்து, அவரது அனைத்துத் திரைப்படன்ங்களுமே, பிறரது கதையை , திரைக்கதையாக்கி, இயக்கப்பட்டவை தான்]

இந்த தொடர் வெற்றிக்குப் பிறகு, கிராமத்தில் இருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர், திரைப்படங்களில் புதிய புரட்சி ஏற்படுத்தியவ்ர் என்ற அடைமொழிகள் பாரதிராஜாவை வந்து அடைந்தன. பாரதிராஜா, கிராமத்து அடையாளங்களை விட்டு விலகத் துவங்கி, எல்லா விதமான திரைப்படங்களையும் உருவாக்க வல்ல இயக்குனராக தன்னை காட்டிக்கொள்ள துவங்கிய காலகட்டம் இது. நகரத்து இளைஞர்களின் மனோபாவத்தைப் படம் பிடிக்க முயன்ற நிழல்கள் (1980) , மலிவான பாலியல் நகைச்சுவையை மையமாக வைத்து வாலிபமே வா வா(1982) , ஆங்கில திரைப்பட பாணியில் டிக் டிக் டிக்* ( 1982) , கிராமப் பெண்களின் குணாதிசயங்களை மையப்படுத்தி எடுத்த திரைப்படங்களைச் சமன் செய்யும் விதமாக உருவாக்கிய நகரப் பின்னணியிலான 'புதுமைப் பெண்' (1983) , இசையை அடிப்படையாகக் கொண்ட காதல் ஓவியம் (1982) ஆகிய திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் தான் வந்தன.

அல்லிநகரத்துப் பால்பாண்டியன், கிராமத்தான் என்ற அடையாளத்தை விட்டு விலகத் துவங்கி, நகரத்துக் கலாசாரத்துடன் ஒன்ற முயற்சி செய்து , அண்ணா சாலை அடுக்கு மாடிக் குடியிருப்பு, நவநாகரீகமான உடைகள், பேச்சிலே அவ்வப்போது குறுக்கிடும் ஆங்கிலம் என்று முழுமையான கோடம்பாக்கத்து முதல் தரமான இயக்குனராகவும் மிளிர்ந்த காலகட்டமும் இதுதான்.

நகர ஆசாமிகள், கிராமங்களைச் செயற்கையாகக் காட்டினார்கள் என்றால், பாரதிராஜாவின் நகரங்களும் செயற்கையாகத்தான் இருந்தன. போதைப் பழக்கத்துடன், கனவுலகில் மிதக்கும் நிழல்கள் நாயகன், டிக் டிக் டிக் படத்தின் பின்புலம், புதுமைப் பெண்ணின் கதைக் களம் போன்றவை செயற்கையாகவே இருந்தன. நகரத்துக்கு என்று ஒரு தனியான மனோபாவம் உண்டு. அதைச் பாரதிராஜா சரியாகப் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.</span>

http://icarus1972us.blogspot.com/2005/09/i.html
Reply


Messages In This Thread
[No subject] - by nallavan - 12-03-2005, 05:32 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:07 PM
[No subject] - by Vasampu - 12-03-2005, 05:05 PM
[No subject] - by stalin - 12-03-2005, 07:09 PM
[No subject] - by Vasampu - 12-03-2005, 07:28 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 07:49 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 08:48 PM
[No subject] - by tamilini - 12-04-2005, 12:07 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:00 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:08 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:17 AM
[No subject] - by AJeevan - 12-04-2005, 02:56 PM
[No subject] - by AJeevan - 12-21-2005, 12:32 AM
[No subject] - by கந்தப்பு - 12-21-2005, 01:06 AM
[No subject] - by வர்ணன் - 12-27-2005, 01:26 AM
[No subject] - by sinnakuddy - 03-31-2006, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)