12-03-2005, 08:03 AM
அன்று வேணியின் பிறந்த நாள். மாலைநேரம் அழகாக தன்னை அலங்கரித்து எப்போ சண் குடும்ப்ம் வருவினம் கேக் வெட்டலாம் என்று ஆவலோடு பதட்டமும் கலந்து இருந்தது வேணிக்கு.
முதல் முதலாக சாறி கட்டியதை சண் பார்க்க போவதை நினைத்து மனம் ஏதோ அவளுக்குள் நாணமாக இருந்தது. அம்மா கேட்டா "என்ன பிள்ளை அடிக்கடி கண்னாடிக்கு முன்னாலை நிக்கிறாய். அதெல்லாம் வடிவாதான் இருக்கு ஏன் ஒருக்கா கோவிலுக்கு போயிருக்கலாம்தானே?" என்று அம்மா சொல்லவும்: சண் அம்மா குரல் கேட்கவும் சரியாக இருந்தது. மனது முயல் குட்டி போல் துடிக்க வாங்கோ என்று வரவேற்றார் அப்பா மெல்ல வெளியே எட்டி பார்த்த வேணிக்கு அங்கே சண் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அப்போ வேணியை கண்ட சண் அம்மா "யாரது? புது பொம்பிளை அங்கே வாறது" என்று ஆச்சரியத்துடன் "பிள்ளை வேணி நல்ல அம்சமாக இருக்கிறீங்க" என்று கன்னத்தில் முத்தமிட்டபடியே பிறந்த நாள் வாழ்த்து சொன்னா
பின்னாலே வந்த சண் தங்கையிடம் ரகசியமாய் கேட்டாள் வேணி "எங்கே உங்கள் அண்ணா? என்று அவருக்கும் சமைத்து விட்டோம் " தெரியாது இப்போ தான் வெளியே போனவர் வருவார் என்று சொல்லி விட்டு விளையாட ஓடிவிட்டா சண் தங்கை.
கொஞ்ச நேரத்தில் படலை கிறீச்சிட்டது எட்டிப்பார்த்த போது கையில் அர்ச்சனை பொருட்களுடன் சண் வந்து கொண்டு இருந்தார். வந்தவன் குரல் கொடுத்து வேணியை கூப்பிட்டபோது, அதற்காகவே காத்து இருந்த வேணி "ஓம் வாறேன்" என்று கூறியவாறே மான் குட்டி போல துள்ளி ஓடி அருகில் வந்த போது தன் கண்ணையே தன்னால் நம்ப்ப முடியாமல் நின்று விட்ட சண் தன்னை சுதாகரித்து கொன்டவனாய் " கடவுளே இப்பதான் அம்மன் கோவிலுக்கு போனேன் அந்த அம்மன் இங்கேயும் வந்தது போல் இருக்கு வேணி. சாரிக்கு நீங்க அற்புதமாக இருக்கிறீங்க இந்தாங்கோ பிரசாதம் உங்கள் பேரிலை அர்ச்சனை செய்தேன் நெற்றியில் வையுங்கோ வேணி" என்று பிரசாத தட்டை அவளிடம் கொடுத்தான்.
அவளும் குங்குமத்தை நெற்றியில் வைத்தபோது சண் கேட்டான் "ஏன் விபூதி தானே முதல் வைக்கவேணும்" என்று "ம்ம்" என்று விட்டு வேணி கேட்டாள் "எப்படி தெரியும் என் நட்சத்திரம் சொல்லுங்கோ" என்று "ம்ம் உங்கள் அம்மா தான் சொன்னா" என்ற போது அவன் அன்பும் அவளை நினைத்து அவள் நல்ல இருக்கவேணும் என்று கோவிலுக்கு போய் வந்த அவனை பாசத்துடன் பார்த்தபடி "வாங்கோ இண்டைக்கு என்கையால் தான் சாப்பிட வேணும் என்று சொல்லி விட்டு கேக் வெட்ட ஆயத்தமானார்கள் எல்லோரும்.
கேக் ஊட்டிய போது சன் மட்டும் கேக்கை கையில் வெட்டி கொடுத்தான் ஊட்டவில்லை அது அவளுக்கு ஏமாற்றம் தான். அவனின் அந்த குணம் பிடித்து இருந்தது வாஞ்சையை செயலில் காட்டும் அவனது இயல்பு, ஒரு நல்ல அன்பான மற்றவரை மதிக்க தெரிந்தவன் என்று அவள் மதிப்பில் சண் உயர்ந்து நின்றான்.
-தொடரும்-

inthirajith