12-03-2005, 07:34 AM
வலி தெரியாக்காயங்கள் பாகம் 8
வேணிக்கு அடிக்கடி சண்ணைப் பார்க்க ஆவலாக இருக்கும். ஆனால் சண் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு மாணவன் என்பதால் அவன் அப்பா கடிதம் போட்டு இருந்தார். முடிந்தால் ஓர் அறை எடுத்து, திருநெல்வேலியில் தங்கும் படியும்இ அதனால் நாளாந்தம் 4 மணி நேரம்போக்குவரத்தை குறைத்து கூட படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று அவனுக்கும் அது சரியாகவே பட்டது
வேணியிடம் சொன்னபோது அவள் முகம் வாடி விட்டது "என்னங்கோ நீங்க போனால் அம்மா தனிய தானே உங்கள் தங்கையும் சின்ன பிள்ளை உதவிக்கு நாங்கள் இருந்தாலும் இரவில் ஒரு துணை வேணும் தானே உங்கள் அப்பா இங்கே இடம்மாற்றம் பெற்று வந்ததும் பிறகு தனிய போவது பற்றி யோசிக்கலாம்" என்று சொன்ன வேணியை அன்புடன் பார்த்த சண் "உண்மை தான் வேணி இதை நான் யோசிக்கவே இல்லை நன்றி" என்று கதைத்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த சண் அம்மா கேட்டா" என்ன கனக்க யோசிக்கிறீங்கள் "இல்லையம்மா அப்பா கடிதம் போட்டவர் தானே அது தான் வேணிக்கு சொன்னேன் வேணி என்னை தனிய போகவேண்டாம் அப்பா வந்தவுடன் போகலாம் என்று சொல்லுறா நீங்கள் தனியவாம் என்று அபிப்பிராயப்படுரா எனக்கும் அது சரியா படுது நீங்க என்னம்மா சொல்லுறீங்கள்?" சண் என்று கேட்டபோது பக்கத்தில் நின்ற வேணியை அன்பாக தலையை தடவிய படி சண் அம்மா சொன்னா "நன்றி பிள்ளை நானும் அப்படி தான் யோசித்தேன் தனிய ஒரு ஆண்துனை இல்லாமல் இருப்பது சிரமம் தானே சண் நீயும் யோசித்து முடிவு எடு உனக்கு படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவெணும் தானே?" என்று அம்மா சொன்னபோது "இல்லையம்மா மூன்றாம் வருடம் தான் கனக்க படிக்கவேணும் அதோடை மருத்துவப்பயிற்சி க்கு பெரியாஸ்பத்திரியில் பிறாக்ரீஸ் க்கு போகவேணும் அப்போ தான் தனிய தங்கவேணும் அப்போ யோசிப்போம்" என்று சண் சொன்னபோது வேணிக்கு ஆறுதலாக ஒரு நிம்மதி வந்தது அதோடை வேணி சொன்னாள் "எனக்கும் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்கலாம் தானே? என்று சொன்ன வேணியின் தலையில் அன்பாக குட்டினான். சண் "நல்ல புத்திசாலி என்று உங்கள் விலங்கியல் ஆசிரியர் சொன்னார் அன்று என்னுடன் பஸ்ஸில் கூட வந்தவர் வேணி அப்போ தான் சொன்னார் உங்களுக்கும் என்றன்ஸ் கிடைக்குமாம் " என்ற போது அவனுக்கு தன்னில் இருக்கும் அக்கறையை நினைத்து பெருமையாக இருந்தது வேணிக்கு.
அப்போதான் வேணி பக்கத்தில் நின்ற சண் அம்மாவிடம் சொன்னாள் " அம்மா சொன்னவா உங்களை 8ஆம் திகதி வீட்டை வரட்டாம் எல்லோரையும் வர சொல்ல சொன்னா" என்ற போது "என்னபிள்ளை விசேஷமோ? சும்மா தான்வரசொன்னா என்று வேணி சொல்ல அதை கேட்டு சிரித்த சண் " அம்மா அண்டைக்கு தான் இந்த வால் பிறந்த நாள் என்று சொல்லிச் சிரித்தான் அப்போ கேட்டாள் வேணி "எப்படி தெரியும் என் பிறந்த நாள் என்று அப்போ சண் உங்கள் அம்மாவிடம் கேட்டேன் சொன்னாங்க வேணி ம்ம் நல்ல தான் என்னை பற்றி எல்லாரிட்டையும் விசாரித்து திரியுறீங்கள் என்று சொன்ன வேணியின் கன்னம் நாணத்தால் மெல்ல சிவந்தது.
-தொடரும்-