12-02-2005, 08:20 PM
நானும் அந்த அம்மன் பற்றிய தொலைக்காவிளம்பரம் பாத்திருக்கிறன். இதில் மிகவும் கவலைக்குரிய விடையம் என்னவென்றால் அதில் காட்டப்படும் சிறுவர்கள். வயது வந்தவர்கள்தான் ஊர்பழக்கதோசத்தை மாத்தேலாது போலிச்சாமிமாரிடம் ஏமாறித்திருப்த்திப்பட்டுக் கொள்ளுறார்கள், நாய்வாலை நிமித்தேலாது பறவாயில்லை.
புலத்தின் வழரும் எதிர்காலச் சந்ததிகளான சிறுவர்களையும் இப்படியா கூத்துக்களில் ஈடுபடுத்துவது
-1- அவர்கள் வாழும் சமுதாயத்தோடு ஒப்பிட்டு பகுத்தாய்ந்து பார்க்க தொடங்கும் போது எமது கலாச்சாரம் பண்பாட்டில் மதிப்பை இழக்க வைப்பது மாத்திரமல்ல எமது சமுதாயத்தின் மீது வெறுப்பையும் உருவாக்கும்.
-2- அவ்வாறு ஒப்பிட்டுப்பார்த்து பகுத்தாய்வு செய்யும் பாக்கியம் கிடைக்காமல் சிறுவயதில் இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் ஆட்கொள்ளப்பட்டு தவறாக மூளைச்சலவை செய்யப்படுபவர்கள் வழர்ந்த பின் புலத்தின் சமுதாய வாழ்வு முறைகளுக்கு உகந்தவர்களாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலுள்ள சவால்களை போட்டிகளை தன்னம்பிக்கையோடும் திறமையோடும் அறிவுபூர்வமான முறையில் எதிர் கொள்ள முடியாது.
இவை அனைத்திற்கும் அவர்களுடை பெற்றார் அறியாமல் செய்யும் கெடுதல் தான் காரணம் என்றதை எப்படி உணரவைப்பது?