12-05-2003, 10:32 AM
ஆரோக்கியமான கருத்துக்களை பலர் சொலிலியிருக்கிறார்கள். நமக்கு வந்த ஆவேசத்தை கூட ஒரு பக்கம் மூட்டை கட்டிவைத்து விட்டு சிந்திக்க வைத்திருக்கிறார்கள் அஜீவனும், வீராவும். பல உண்மைகளை வெளியில் கொணர்ந்தமைக்கு நன்றி. இப்ப பூனைக்கு மணி கட்டுவது யார்? இந்த புலம் பெயர் ஊடகங்களை இங்கே உள்ள கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகளை கொண்டு வர அழுத்தம் யார் கொடுக்கப்போகிறார்கள்? இதற்கு இந்த நிறுவனங்கள் தயாரா? எனது சொந்த அனுபவத்தில் கூற வேண்டுமானல், இந்த தொலைக்கட்சிகள் தரம் பற்றி பயப்படுகின்றன. தரம் என்று இந்த தொலைக்காட்சிகள் இந்திய தரத்தை வைத்திருப்பதே மிக வேதனையான விடயம். ஒரு தொலைக்காட்சி பிரான்ஸில் தயாரான படங்களை ஒரு தொகுப்பாக போட்டார்கள். அதை பற்றிய விமர்சனைத்தை மக்கள் தமக்குள்ளாகவே வைத்தும் விட்டனர். விளைவு? புலம் பெயர் தயாரிப்புகளை மக்கள் மௌனமாக நிராகரிப்பு! ஆனால் இந்த தயாரிப்புகளை மேற்கொண்டவர்களிடம் விமர்சனம் சென்றதா? அண்மையில் லண்டனில் ஒரு படம் வெளியாகியது. இதைப்பற்றி விமர்சனம் செய்ய ஒரு தொலைகட்சி இந்த தயாரிப்பாளர்களை முதலில் அணுகி நாங்கள் உங்களையும் வைத்து ஒரு விமர்சனம் செய்வேம். நீங்களும் உங்கள் கருத்தை கூறுங்கள், ஆனால் ஒளிப்பதிவுக்கு மட்டும் கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டும். காரணம் அதற்கு இந்த நிறுவனம் பணம் கொடுக்காதாம். அறிவிப்பாளர் பாவம் அவருக்கு அக்கறை இருக்கு ஆனால் நிறுவனத்திற்கு இருக்கோ? இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் அதற்காக நாம் விசக் கிருமிகள் பக்கம் விழுவதையும் ஏற்றுக்கொள்ள முடியதாது. தொடரந்து நமது தொலைக்காட்சிகளை விமர்சிப்பதன் மூலமே அவர்களை சரியான பாதைக்கு செல்ல வைக்க முடியும்.

