12-01-2005, 11:54 PM
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 7
அடுத்த நாள் அதிகாலையிலே வந்த சண், வேணியை சந்திக்க வந்தான். அங்கே வெளி நாட்டில் குளிரிலும் பிள்ளைகளுக்காக கஸ்டப்பட்டு அனுப்பிய பணத்தை அம்மாவை இயக்கத்துக்கு போடுவன் என்று சொல்லி பயமுறுத்தி, வாங்கிய மோட்டார் சைக்கிள் மைனர் செயின் தமிழ் படகதாநாயகன் என்ற நினைப்பில் பந்தாவுடன் ஒரு கூட்டம் பொடியங்கள் நின்றார்கள்.
வேணி சண் உடன் வந்ததை பார்த்தவர்கள் நக்கலாக "ஓ வந்தவுடனே பிடித்து விட்டங்காள் நாங்கள் தான் சும்ம பின்னாலே சுத்தியது" என்று ஒருவன் சொல்ல எல்லோரும் கோரஸ்ஸா சிரித்தபோது கோபம் தலைகேற தான் கற்ற கராத்தே வித்தையை ஒருவனிடம் காட்டினான் சண். அதை பார்த்தவர்கள் எப்படி அந்த இடத்தை விட்டு ஓடினார்கள் என்று தெரிய வில்லை வேணி பஸ் ஏறும் போது அவளுடனே அவனும் கூடவே வந்தான் பஸ்ஸில் அவளுக்கு அருகில் யாருமே அவளில் இடிக்காத மாதிரி காவல் நின்றான் சண்.
வேலைக்கு எல்லோரும் போகும் நேரம் இன்று தான் யாருமே அவளை இடிக்காதமாதிரி பயணம் செய்தாள். அவன் விரல் நுனி கூட அவள் மேல் படவில்லை அத்துடன் ஒன்றுமே கதைக்கவும் இல்லை மௌனமாகவே வந்தவனை பார்த்து அவனது நாகரிகமான நடத்தையை தனக்குள்ளே மனதுக்குள் ரசித்தாள் வேணி.
அன்று மாலை வீட்டுக்கு வந்த போது அம்மா சிரித்த போது ஒருகவலை விட்டது போல் சிரித்தா வேணி கேட்டாள் "என்ன அம்மா சிரிப்பு" என்று "இல்லை பிள்ளை காலமை சந்தியில் நின்ற பொடியங்களுக்கு சண் அடித்து விட்டாராம் இப்போ ஒருத்தனையும் அதில காணவில்லை அப்பா சொன்னார் அது தான் சிரித்தன்" என்ற போது.
" அம்மா அது என்னை எல்லோரும் நக்கலடித்தவை நான் தான் சண்ணிடம் சொன்னேன் அவர் இண்டைக்கு காலமை என்னோட வந்து தான் அடிச்சவர் அவங்கள் ஓடின ஓட்டமோ " என்று சிரித்தாள் வேணி. "அம்மா அவர் வந்தால் அவரை ஒரு நாள் சாப்பிட கூப்பிடவேணும் அம்மா " என்று சொன்ன வேணியை அம்மா ஆச்சரியமா பார்த்தபடியே கேட்டா "என்ன பிள்ளை சொல்லுறாய்" இல்லையம்மா என்ற வேணியை "இதுவரை யாரையும் சாப்பிட கூப்பிட்டதில்லை இப்போ தான் அந்த நல்லபழக்கம் வந்து இருக்கு கொழும்பு தம்பிக்கு இருக்கிற நல்லபழக்கம் உனக்கும் கொஞ்சம் வருகுது நல்லம் தான் அவைரை வரச் சொல்லு அவை எல்லோரையும் வர சொல்லு என்ன விருப்பம் என்று கேளு அப்போதhன் விரும்பியதை சமைக்கலாம்" என்று சொன்ன அம்மா " உன் பிறந்த நாளுக்கு வரச் சொல்லி கூப்பிடு சந்தோசமக இருக்கும் தானே" என்ற அம்மாவை அப்படியே கட்டி பிடித்து முத்தமிட்டாள் வேணி
-தொடரும்-

inthirajith