12-01-2005, 05:53 AM
vasisutha Wrote:எறும்பு ஊர கல்லும் தேயும்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
குரங்கு கையில் பூமாலை போல.
அடியாத மாடு படியாது.
ஒரு வேலைக்காக அதிகமாக கத்தி சத்தம்போடுபவர் தான் கடைசியில அவ் வேலை முழுக்க செய்யவேண்டி வரும்.
ஒரு பொருளின் பெறுமதி அறியாமல் அதைப் பற்றி கேவலமாகப் பேசுபவருக்கு சொல்லப்படும் பழமொழியே இது. ஆனாலும் இப்ப எல்லாத்துக்கும் இதைப் பாவிக்கிறார்கள்.
எங்கபோனாலும் ஒருத்தனுடைய குணத்தை மாற்றவே முடியாது. அது எந்தக்கஸ்டம் வந்தாலும் சரி. இது போலவே உள்ள இன்னுமொரு பழமொழி "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."
நத்தை வயிற்றி............ஹிஹி. இதுக்கு தெரியாதுங்கோ
குரங்கு கையில் புூமாலை என்பது ஒரு பொருளின் முக்கியத்துவம் தெரியாமல் அதை பாழாக்குபவன் குறித்து வரும் பழமொழி. உதாரணமாக நல்ல விடயம் இன்றி அரட்டை அடித்தே யாழ் களத்தை நடத்திறமில்லோ. அது தான்( மைச் ஆகுதா) :wink:
சில வேலைகளை உருப்படியாக செய்யாமல் இருப்பவர்களைக் குறிக்கும். உதாரணமாக சிங்களவனுக்கு கொடுக்கின்ற அடி மூலம் தான் அவனை பணிய வைக்கமுடியிதுல்லோ. :wink:
[size=14] ' '

