Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே
#1
<span style='color:brown'><b>விருதுகளை தேடிப் போகவில்லை....
ஆனால் விருதுகள் தேடி வந்தன!
-ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரேயின் வரலாறு</b>
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/satyajitray01.jpg' border='0' alt='user posted image'>
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் 1921-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தார். தந்தை ரே. தாயார் சுப்ரபா. இவரது குடும்பம் நடுத்தர வகுப்பைச் சார்ந்தது. இவருடைய தாத்தாவும், தந்தையும் வங்க மொழியில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர்.

சத்யஜித்ரேவிற்கு இரண்டு வயதாகும்போது இவருடைய தந்தை மரணம் அடைந்தார்.

ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில் கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர் நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.

1942-ம் ஆண்டு விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். இசையிலும், சினிமாவிலும் ஆர்வத்துடன் விளங்கினார். மேற்கத்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிக திரைப்படங்களை பார்த்து தன்னுடைய சினிமா அறிவினை வளர்த்து கொண்டார்.

1947-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலாவது பிலிம் சிட்டியை சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து தோற்றுவித்தார்.

1950-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களை பார்த்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பியதும் பிபூதி பூஜன் பானர்ஜியின் ''பதர் பாஞ்சாலி'' நாவலை குழந்தைகள் இலக்கியமாக எழுதி தருமாறு கொல்கத்தா நகரின் பிரபலமான ஒரு பதிப்பகத்தார் கேட்டு கொண்டனர். பின்னர் இதையே தன்னுடைய முதலாவது திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை ரே ஸ்டுடியோக்களுக்கு வெளியே தத்ரூபமான இடங்களில் எடுத்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பொருளாதார உதவியுடன் படத்தை முடித்து வெளியிட்டார். இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.

1959-ம் ஆண்டு ''த அபுடிராய்லசி'' என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்களை பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து சமுதாய கண்ணோட்டத்துடன் அமைந்திருக்கும்.

1987-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் கவுரவ பரிசுகளில் ஒன்றான ''லிஜியன் டி'' என்ற பரிசினை பெற்றார். இந்த பரிசு பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்காய்ஸ் மித்தரண்டு கொல்கத்தா நகரத்திற்கு வந்து வழங்கி கவுரவித்தார்.

இவர் உயிருடன் இருக்கும்போதே இவரைப்பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/sathyaraj03.jpg' border='0' alt='user posted image'>
சத்ஜித்ரே திரைப்பட தயாரிப்பாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வங்க மொழியில் எழுதப்பட்ட இவருடைய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தனது நாவல்களில் பதினைந்திற்கும் மேலானவற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

ரேயின் வங்க மொழி காலம், இந்திய திரைப்பட துறையின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.

1967-ம் ஆண்டு ''மகஸாஸே'' விருது வழங்கப்பட்டது. யூகோஸ்லோவியா ''கொடி விருது'' உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.

திரை உலக வரலாற்றில் அளப்பறிய சாதனை புரிந்த சத்யஜித்ரே 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் தன்னுடைய இன்னுயிரை துறந்தார்.

<img src='http://www.raitre.rai.it/Static/immagine/27/fuoriorario_SatyajitRay.jpg' border='0' alt='user posted image'>

<b>-கேன்ஸ் திரைப்பட விழாவில் சத்யஜித்ரே!</b>


சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழா நடந்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் இரு ராய்'கள். ஒருவர் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித்ராய். (விருப்பமுள்ளவர்கள் சத்யஜித்ரே என்றும் அழைத்துக் கொள்க) இன்னொருவர் ஐஸ்வர்யராய். திரைப்படவிழாவில், ரேயின் படைப்புகள் அமோக வரவேற்பு பெற்று நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மறைந்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமேதை! (கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இந்திய அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் கலந்து கொண்டு, அதன் வசமுள்ள திரைப்படங்களின் டி.வி. மற்றும் வீடியோ உரிமைகளை 1,35,000 டாலருக்கு (நம்ம ஊர் மதிப்பில் கணக்கு போட்டால்... அப்பாடியோவ்!) விற்பனை செய்துள்ளது. இதில் 60 சதவீத வருவாய் சத்யஜித்ரே படங்களின் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
சத்யஜித்ரே முதன் முதலாக இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தின் சர்வதேச உரிமை என்.எப்.டீ.சி.யிடம் உள்ளது. இந்த படம் உள்பட கணஷத்ரூ, காரி, பெய்ரீ மற்றும் அகன்டக் போன்ற என்.எப்.டீ.சி தயாரிப்பில் சத்யஜித்ரே இயக்கிய, காலத்தால் அழியாத காவியங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ உரிமை நல்ல அளவில் விலை போயுள்ளது.

இங்கு சத்யஜித்ரே படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் டி.வி மற்றும் வீடியோ உரிமைகளை ஃபிரான்ஸ் நாட்டின் ஃபிலிம்ஸ் வித்தவுட் ஃப்ரான்டியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவை ஃபிரான்ஸ் நாட்டிலும் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுமாம்.</span>

நன்றி: செந்தில்.ஆர்.பி (தமிழ்சினிமாவிலிருந்து..........)
Reply


Messages In This Thread
ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே - by AJeevan - 11-30-2005, 11:42 PM
[No subject] - by Birundan - 12-01-2005, 01:17 AM
[No subject] - by stalin - 12-01-2005, 10:54 AM
[No subject] - by AJeevan - 12-01-2005, 10:37 PM
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:12 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:14 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 06:49 PM
[No subject] - by Netfriend - 12-03-2005, 07:01 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 09:15 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)