11-29-2005, 10:51 PM
கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்)
பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.
பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன்.


