12-04-2003, 04:32 PM
உண்மை தான். அண்மையில் தொலைக்காட்சியைப் பாற்போமே என போட்டேன். நகைச்சுவை நேரம் என ஒரு நிகழ்வு போய்க்கொண்டு இருந்தது. மூன்று நல்ல கலைஞர். பாடலை மாத்தி பாடி கொலை செய்து கொண்டு இருந்தார்கள் நானும் கொலைசெய்யப் பட்டு விடுவேனோ என பயந்து தொலைக்காட்சியை உடனடியாக நிறுத்தி விட்டேன்.
AJeevan Wrote:இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள்.
இப்போது அழுவதெல்லாம் , சாவுக்கு வைக்கும் ஒப்பாரியே தவிர வேறெதுவுமில்லை.
இந்திய தொலைக் காட்சிகள் வந்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். அவர்களது திட்டமிடல் , தொலை நோக்கு அவர்களை இந்தளவுக்கு வளர்த்திருக்கிறது.
ஆனால் நம்மவர் தொலை நோக்கு , யார் மீதாவது பழிகளை போட்டுக் கொண்டே , குளிர் காய நினைப்பது.
எந்த நாட்டு நிகழ்ச்சிகளை வாங்கினாலும், தமக்கென சொந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காத எந்த ஊடகமும் நிலைக்காது. (டெலிபோன் நிகழ்ச்சிகள் அல்ல. அதைச் செய்ய வானோலி போதும். அதற்கு ஏன் ஒரு தொலைக் காட்சி?)
[b]Nalayiny Thamaraichselvan

