11-28-2005, 11:33 PM
புலிகளுடன் பேச மஹிந்த மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான பேச்சுக்களை புதிதாக ஆரம்பிக்க நாட்டின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு மறுபடியுமாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச மற்றும் உள்நாட்டு ராஜீய அதிகாரிகளை முதல்முறையாக சந்தித்தபோது மஹிந்த இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பதாக ஜனாதிபதி செயலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன்னை நடைமுறை அரசியலில் நம்பிக்கைகொண்ட யதார்த்தவாதி என்று மாவீரர் தின உரையில் கூறியிருப்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
அமலில் இருக்கும் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் நடைமுறைகளை மீளாய்வு செய்வது தொடர்பாக பேசுகின்ற அதேவேளை இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு தொடர்பான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடலாம் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய மாவீரர் தின உரைக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ பதில் என்று ஜனாதிபதியின் இன்றைய அறிக்கை கருதப்படும்போதிலும், நேற்றைய உரையில் விடுக்கப்பட்ட அவசிய மற்றும் அவசர கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் இன்றைய அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
<b>பிபிசி தமிழ்</b>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>