11-27-2005, 08:12 PM
<b>மஹிந்தவுக்கு பிரபாகரன் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041201171048pirapaharan-lighting-lamp-2.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை ஒட்டி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
சுமார் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்த பிராபகரன் அவர்களின் உரையில், கடந்த காலத்தில் ரனில் விக்கிரமசிங்கே அவர்களுடைய தலைமையிலான அரசாங்கத்தோடு நடத்தப்பட்ட சமாதான பேச்சுக்களிலிருந்து விலகியதற்கான காரணத்தை பின்வருமாறு விளக்கினார்.
ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது. இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜுன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம் என்றார் பிரபாகரன் அவர்கள்.
அடுத்து சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்பு செயல்படுத்தப்படாமல் தடைபட்டுப்போனது பற்றிக்கூறும்போது, சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு. கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம், என்றார் பிரபாகரன் அவர்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பற்றி கருத்து தெரிவித்த பிரபாகரன் அவர்கள், சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை. இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சிங்கள - பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம், என்றார்.
அதே சமயம், மஹிந்த அவர்களுக்கு அவகாசம் தர தாம் தயாராக இருப்பதாகவும், பிரபாகரன் அவர்கள் குறிப்புணர்த்தினார். அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம், என்றார் பிரபாகரன் அவர்கள்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051127173129prabhakaran203.jpg' border='0' alt='user posted image'>
இறுதியாக பிரபாகரன் அவர்கள் பின்வரும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோளுடன் தமது உரையை முடித்திருந்தார். ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம், என்றார் பிரபாகரன் அவர்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உரையை போருக்கான ஒரு அழைப்பாக கருதமுடியாது என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த ஹக்குறூப் ஹொக்லண்ட் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் போரின் மூலம் அல்லாமல் சமரசப் பேச்சுக்களின் மூலமே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
போர்நிறுத்த உடன்படிக்கையின்படி எந்த ஒரு தரப்பாவது போருக்கு போக முடிவு செய்தால் அவர்கள் 14 நாட்களுக்கு முன்னதாக அது தொடர்பாக நோர்வே மத்தியஸ்தர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
<b>தமிழர் பகுதிகளில் மாவீரர் தின விழா</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051127172725trincomartyrs203.jpg' border='0' alt='user posted image'>
<i>திருகோணமலையில் மாவீரர் தின விழா</i>
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுட்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வன்னிப்பகுதியில் பெயர் குறிப்பிடப்படாத ஒரிடத்தில் இதுவரையில் உயிர்நீத்த தமது அமைப்பைச் சேர்ந்த 17 ஆயிரத்து 903 உறுப்பினர்களை நினைவுகூர்ந்து தீபமேற்றி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தியதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர் நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கென மாவீரர் துயிலும் இல்லம் என பெயரிட்டு வடக்குகிழக்கு மாவட்டங்களின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களுக்குச் சென்ற உயிர் நீத்த புலிகளின் பெற்றார்கள், உறவினர்கள், அவர்களின் கல்லறைகளில் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் மலர்கள் வைத்து, தீபமேற்றி, மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவீரர் தினத்தின் முக்கிய நிகழ்வுகள், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாங்குளம், யாழ்ப்பாணத்தில் கோப்பாய், போன்ற இடங்களில் வடக்கில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதிகள், முக்கியஸ்தர்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரை புலிகளின் மாவீரர் தின வைபவங்கள் கஞ்சிகுடிச்சாறு தாண்டியடி தரவை கந்தலடி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சிவன்கோவிலடி உள்ளிட்ட பலவேறு பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் தொடர்பான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இன்றைய நிகழ்வையொட்டி, கூடிய எண்ணிக்கையானவர்களை ஈடுபடுத்தி விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் போர்நிறுத்த கண்காணிப்பு குழவினர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிசாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
BBC tamil