Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005..
#14
தொடர்ச்சி....

பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன. இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.


நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும்.

எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எனது அன்பான மக்களே,

எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம்.

இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது. போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது.

எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்.

பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.

ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.

எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து,

கடும்போக்கைக் கடைப்பிடித்து,

காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிப+ணுவோமாக.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

என்று தேசியத் தலைவர்கள் அவர்கள் தெரிவித்தார்

நன்றி புதினம். Idea

பி.கு: மன்னிக்கவும், சில பகுதிகளை மேலே இனைக்க முடியவில்லை. நன்றி.
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 11-27-2005, 12:58 PM
[No subject] - by sinnappu - 11-27-2005, 01:13 PM
[No subject] - by adsharan - 11-27-2005, 01:48 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 01:48 PM
[No subject] - by தூயா - 11-27-2005, 01:52 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 01:54 PM
[No subject] - by sri - 11-27-2005, 01:54 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 01:55 PM
[No subject] - by hari - 11-27-2005, 02:01 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 02:21 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 02:48 PM
[No subject] - by RaMa - 11-27-2005, 05:56 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 06:14 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 06:36 PM
[No subject] - by sri - 11-27-2005, 07:59 PM
[No subject] - by AJeevan - 11-27-2005, 08:12 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 08:20 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 08:26 PM
[No subject] - by tamilini - 11-27-2005, 08:26 PM
[No subject] - by Birundan - 11-27-2005, 08:33 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 08:41 PM
[No subject] - by Birundan - 11-27-2005, 08:44 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 09:25 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 09:59 PM
[No subject] - by narathar - 11-27-2005, 11:34 PM
[No subject] - by Thala - 11-27-2005, 11:47 PM
[No subject] - by Aravinthan - 11-27-2005, 11:50 PM
[No subject] - by narathar - 11-27-2005, 11:55 PM
[No subject] - by Aravinthan - 11-28-2005, 01:54 AM
[No subject] - by adithadi - 11-28-2005, 04:13 AM
[No subject] - by hari - 11-28-2005, 04:17 AM
[No subject] - by Vaanampaadi - 11-28-2005, 05:01 AM
[No subject] - by மேகநாதன் - 11-28-2005, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 11-28-2005, 05:47 AM
[No subject] - by selvanNL - 11-28-2005, 06:41 AM
[No subject] - by அருவி - 11-28-2005, 08:54 AM
[No subject] - by Niththila - 11-28-2005, 09:11 AM
[No subject] - by MUGATHTHAR - 11-28-2005, 10:09 AM
[No subject] - by kurukaalapoovan - 11-28-2005, 10:20 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:21 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:33 PM
[No subject] - by kurukaalapoovan - 11-29-2005, 12:18 AM
[No subject] - by Jude - 11-29-2005, 06:16 AM
[No subject] - by Sukumaran - 12-04-2005, 01:45 AM
[No subject] - by pepsi - 12-07-2005, 01:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)