Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள்பிரவேசம்.....
#6
<b>சந்திரிகா எம்.பி.யாகி பாராளுமன்றம் வருவாரா? சு.க. மத்தியகுழு திங்கள் முடிவெடுக்கும்</b>

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடத்தின் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு சந்திரிகா குமாரதுங்க முயற்சிக்கிறார்.

ஆனால், அந்த வெற்றிடத்திற்கு மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த டளஸ் அழகப்பெருமவை நியமிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டிருந்தார்.

எனினும், இந்த வெற்றிடத்தை தனக்காக ஒதுக்குமாறு கட்சித் தலைவி சந்திரிகா குமாரதுங்க மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமைச்சரவை பதவியேற்பை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அமைச்சர் மங்கள சமரவீர சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, பாராளுமன்றத்திற்கு அவர் கட்டாயம் வரவேண்டுமென மங்கள சமரவீர வலியுறுத்தியதுடன் இதன் மூலம் அவர் தனது முழு ஆதரவையும் வழங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்திற்கு வரவேண்டுமென கட்சிக்குள் பலர் விரும்பும் அதேநேரம், கட்சித் தலைமைப்பதவியை புதிய ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm
::
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 11-26-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 11-26-2005, 12:22 PM
[No subject] - by Birundan - 11-26-2005, 12:57 PM
[No subject] - by MUGATHTHAR - 11-27-2005, 08:23 AM
[No subject] - by Thala - 11-27-2005, 11:32 AM
[No subject] - by தூயவன் - 12-02-2005, 03:28 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)