11-26-2005, 03:11 AM
Vasampu Wrote:<b>பிருந்தன்:</b>
கொஞ்சம் மனச்சாட்சியிருப்பதாலேயோ என்னவோ சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள். டி.என:கோபாலன் ஒரு பத்திரிகையாளனாகத்தான் அங்கு செயலாற்றியிருக்கின்றார். பி பி சியின் செய்தியாளராகவல்ல. இங்கே கும்பலிலே கோவிந்தா போடுபவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. மேகநாதன் கூட விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்தெழுதியுள்ளார். மேலும் பிருந்தன் நீங்கள் சுட்டிக் காட்டிய திருவின் கருத்தை நான் ஏற்கனவே படித்து அதற்குப் பதில்க் கருத்தும் எழுதியுள்ளேன். அது போல் திரு அவர்கள் கூட உங்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். பி பி சி ஆனந்தி(அவர் சில மாதங்குளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்) அக்காவின் காலத்தைப் பற்றி சொல்பவர்கள் அவரின் காலத்தில் கூட பி பி சியைத் து}ற்றியதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்.
வசம்பு நடந்தவிடயங்களுக்கும், நடந்து கொண்டிருக்கும் விடயங்களுக்கும் என்னால் பதில் தரமுடியும், டிஎன் கோபாலன் சம்பந்தப்பட்ட, பிபிசி, இந்து மன்னிப்புகேட்டவிடயம், நடந்திருக்கிறது, அதனால் அதைபற்றி கதைக்கிறோம், நீங்கள் கேட்டகேள்வி ஊகத்தின் அடிப்படையில் பிபிசிக்கும் ஜபிசிக்கும் செய்திகள் கொடுப்பவர்பற்றி, இதுநடக்காதவிடயம், உங்கள் ஊகங்களுக்கு என்னால் பதில் அழிக்கமுடியாது, காரணம் ஊகங்கள் எப்போதும் வேண்டாத பிரச்சினையை உருவாக்கும். உதாரனமாக மகாத்மாவை பிடிக்காத ஒருவர் இப்படி கேள்வி கேட்கலாம், "மகாத்மா வெள்ளையர்களுக்கு இந்தியாவை காட்டிக்கொடுத்திருந்தால் அவருக்கு கோட்சே கொடுத்த மரணதண்டனை சரியா?" என இதற்கு பதில் எதுவாக இருக்கும், இது ஒரு ஊகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வியே, இக்கேள்வியும் அதன் பதிலும் வீண்பிரச்சினைகளை உருவாக்குமா? இல்லையா? அதனால் ஊகத்தின் அடிப்படையில் எழுதுவதையும், கேள்விகேட்பதையும் தவிர்ப்போம். நடந்ததை நடந்துகொண்டு இருப்பதைபற்றிக் கதைப்போம். அதுவே ஆரோக்கியமானதாகவும், பிரயோசனமாகவும் இருக்கும் என்பது எனது துனிபு.
.
.
.

