Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள்பிரவேசம்.....
#2
பொது நலம் கருதி சந்திரிகா மீண்டும் அரசியக்கு வர விரும்புகின்றார் என்று எனக்கு தோன்றவில்லை. பொதுநலன் கருதியே அவர் மீண்டும் அரசியலுக்கு வரமுயல்கின்றார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அது காலம் கடந்த ஞானோதயம். அதற்கு அவருக்கு கிடைத்த வாய்ப்புக்களை அவர் தவறவிட்டு விட்டார். பொதுவாக அரசியல் மற்றும் பதவிகளில் இருப்போர் தாம் இறக்கும் வரை அதை விட்டு விலக விரும்புவதில்லை. அந்த அளவுக்கு பதவி மோகம் அவர்களை பிடித்து ஆட்டுகின்றது. சிறிமா பண்டாரநாயக்காக தனது இறுதிக்காலத்தில் செயற்படமுடியாத நிலையில் கூட அரசு பதவியில் இருக்க விரும்பினார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தேசிய தின நிகழ்வு என்று நினைக்கின்றேன். அதற்கு பிரிட்டிஷ் இளவரசர் சார்ளஸ் கூட வந்திருந்தார். அதில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ன்அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, அவரின் உடல்நிலை அந்த அளவு மோசம் அடைந்திருந்தது. ஆனாலும் அவர் பதவியில் இருந்தார். இதை பதவி மோகத்துக்கு ஒரு உதாரணமாகவே சொல்கின்றேன், சிறிமாவோவை மட்டும் குறிப்பிட்டு அல்ல.

இப்போது சந்திரிகா மீள அரசியலுக்கு வர முயன்றால் அது அவரது சொந்த அபிலாசைகளை கருதியே இருக்கும். இலங்கை அரசியலில் உச்சத்தில் இருந்த அவர் மகிந்த பதவியேற்றதும் திடீரென அதலபாதாளதுக்கு போய்விட்டது போன்ற ஒரு நிலைமையை செய்திகள் காட்டுகின்றது. அதிகாரம் கையை விட்டு சென்றுவிட்ட நிலையில் சுதந்திர கட்சியில் அவருடைய பிடிப்பு குறைவது போலவும் தெரிகின்றது. கட்சியில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ளவோ அல்லது மகிந்தவுக்கு எதிராக உள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கைப்பற்றவோ அல்லது இன்ன பிற சுய நலங்களுக்காகவோ அவர் நாடளுமன்றத்துக்கு திரும்ப முயலலாம்.

இந்த தலைப்புடன் தொடர்புடைய செய்தி இணைப்பு ஒன்று
http://www.theacademic.org/stories/1132905...ry.shtml[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 11-26-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 11-26-2005, 12:22 PM
[No subject] - by Birundan - 11-26-2005, 12:57 PM
[No subject] - by MUGATHTHAR - 11-27-2005, 08:23 AM
[No subject] - by Thala - 11-27-2005, 11:32 AM
[No subject] - by தூயவன் - 12-02-2005, 03:28 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)