11-26-2005, 12:16 AM
Vasampu Wrote:<b>உதாரணமாக பி பி சிக்கு இலங்கையிலிருந்தும் பலர் செய்தி வழங்குகின்றார்கள். அப்படிச் செய்தி வழங்கும் ஒருவர் பெயரில் சிறுமாற்றத்துடன் பலகாலமாக ஐ பி சிக்கும் செய்திகள் வழங்கி வருகின்றார். அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எந்த வானொலியைச் சம்பந்தப்படுத்தி எழுதலாமெனச் சொல்வீர்களா???</b>
ஒரு திறமையான ஊடகவியலாளன் எங்கும் வேலை செய்யலாம்... அது அவர் பொருளாதார வசதிக்கேற்றமாதிரி அமைத்துக் கொள்ளலாம் தப்பில்லை... ஆனால் ஒரு ஊடகவியலாளராய் தன் வரைமுறையை மீறினால் அவர் அங்கு இருக்கத் தகுதி அற்றவராவார்..... எந்த ஊடக நிறுவன அனுமதி இல்லாமல் ஒரு கூட்டத்தைக் கூட்ட நினைத்த போதே அவரை வேலையில் இருந்து நிறுத்துவது உசிதம்...
சரி வசம்பு நீர் பிபிசி க்காக வக்காலத்து வாங்குகிறீர் என் கேள்விக்குப் பதில் சொல்லும்.... தமிழர் போராட்டங்கள் புலத்திலும் தாய்நிலத்திலும் நடந்துள்ளன... எப்பவாவது பிபிசி அதை செய்தியாக்கி இருக்கிண்றதா..??????..
ஜேவீபி புலிகள் எதிர்ப்பு எண்று நடத்துவன கோசங்கள் தட்டிகள் எல்லாம் படங்களோடு செய்தியாகிறதே அதன் மர்மம்தான் என்னவோ..??????
::

