12-03-2003, 02:10 PM
<b>அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர வேண்டுமென்பதே தலைவரின் கருத்தாகும் - நினைவுத்து}பி திறப்பில் கேணல் பால்ராஜ்</b>
அநியாயமாகக் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஆங்காங்கே நினைவுத்து}பிகளைக் கட்டி நினைவு கூரப்படவேண்டும் என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணக்கருத்தாகும். அந்த எண்ணக்கருத்தை நான் இன்று ஒப்பிட்டுப்பார்க்கிறேன் என தமிழீழ விடுதலைப்புலிகளின் மணலாறு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு நெடுங்கேணி ஒதியமலையில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்து}பி திறப்பு நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு பேசும்போதே கேணல் பால்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான நினைவுத்து}பிகள் கட்டப்பட்டு நினைவு கூரப்படவேண்டும். வடக்கு கிழக்கு தாயகப்பகுதிகளில் எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை 85 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் சிங்களப்படையினரால் அநியாயமாக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
1987, 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய இராணுவத்திடமிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைக் காத்த மண் இந்த மண் இதனாலேதான் முல்லை மண் புனித பூமியாகப் போற்றப்படுகின்றது. இம்முல்லை மாவட்டத்திற்கு பெரும் வரலாறு உண்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைக் காத்த மண் முல்லை மண் என்பதை விளங்கிக் கொள்வார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நீண்ட காலமாக இந்த மண்ணிலிருந்து போராடினார். போராடிய காலப்பகுதியில் மிகப்பெரிய வல்லரசுடன் போராடி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை கொன்றும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரை காயப்படுத்தியும் இந்திய வல்லரசினை விரட்டியடித்த சம்பவத்தினையும் தமிழீழத் தேசியத் தலைவர் இந்த மண்ணிலிருந்தே மேற்கொண்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முற்பகல் 11.00 மணிக்கு ஒதியமலைக் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை முல்லை மாவட்ட அரசஅதிபர் இமல்டாசுகுமார் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் பால்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகச்சுடரினை வவுனியா வடக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீப் ஏற்றி வைத்தார். நினைவுத்து}பியினை தமிழீழ நிர்வாக சேவையின் துணைப் பொறுப்பாளர் இளஞ்சேரன் திரை நீக்கம்செய்து வைத்தார் நினைவுரை சிறப்புரைகள் இடம்பெற்றன.
இதேவேளை ஒதியமலைக் கிராமத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 21 மாவீரர்களின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவுத்து}பிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
நன்றி: ஈழநாதம்,தழிழ்நாதம்