11-24-2005, 05:30 PM
<b>குறுக்குவழிகள் - 99</b>
Cache என்பது என்ன?
ஓர் உலாவி தான் செல்லும் வெப்தளங்களின் தகவல்களை சேமிப்பதற்கும் பின் தேவைப்படும்போது அணுகுவதற்கும் ஆன ஹாட் டிஸ்க்கில் உள்ள இடம்தான் Cache என்பது. நீங்கள் ஓர் வெப்தளத்திற்கு முதன்முதலில் செல்லும்போது உங்கள் உலாவி அத்தளத்தின் பிம்பத்தை Cache ல் பதிந்துவிடுகிறது. மீள இன்னொருதரம் அத்தளத்திற்கு செல்லும்போது உலாவி அத்தளப்பக்கங்களை Cache ல் தேடி, கிடைத்தால் முழுவதையுமோ அல்லது பகுதியையோ அத்தளப்பக்கங்களை திரையில் காட்டுவதற்கு பயன்படுத்தும். இதனால் வேலை பாதியளவு குறைவதோடு செயற்திறனும் அதிகரிக்கும்.
இந்த Cache ஐ அடிக்கடி சுத்தம் செய்வது உலாவியை தளங்களிலிருந்து புதிய தகவல்களை இறக்கம்செய்ய நிர்ப்பந்திக்கும். அத்தோடு தேவையற்ற தகவல்கள் தேங்கிக்கிடப்பதையும் தவிர்க்கலாம். உலாவிகளை Cache ஐ தேடாமல் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளலாம். அதற்கு அதன் Help மெனுவை பார்த்து செட் பண்ணிக்கொள்ளவேண்டும்.
Cache ஐ இப்படி சுத்தம் செய்துகொள்ளவும்.
IE--> Tool--> Internet Options--> General Tab--> Delete Files.
Delete Cookies என்று ஒரு பட்டன் காணப்படும். அதை பாவிக்கத்தேவையில்லை. Files ஐ அழிக்கும்போது Cookies ம் தானாக அழிந்துவிடும். Internet Temporary Files யும் History யும் அழிப்பதுதான் Cache ஐ சுத்தப்படுத்துவதாகும்.
உங்கள் ஹாட் டிஸ்க்கில் Cache க்காக ஒதுக்கப்பட்டுள்ள அளவை நீங்கள் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்
IE--> Tools--> Internet Options--> General Tab--> Settings செட்டிங்ஸ் டயலக் பொக்ஸ் இல் ஒரு Slider காணப்படும் அதை இழுத்து கொள்ளளவை மாற்றிகொள்ளலாம். (XP யில் இப்படி).
இதே பெட்டியில் ஒவ்வொருமுறையும் புதிதாக தகவல்களை இறக்கம் செய்யும்படியும் அமைத்துக்கொள்ளக்கூடிய Settings ம் உண்டு. Check for newer versions of stored pages என்ற வாக்கியத்தின் கீழ் பல Options கள் காணப்படுகின்றன. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்கவும்.