Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளிநொச்சி மருத்துவமனைக்கு இந்தியா மருந்துகள்அன்பளிப்பு
#1
கிளிநொச்சி மருத்துவமனைக்கு இந்திய தூதரகம் மருந்துப்பொருட்களை வழங்கியது
இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள்இ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலுள்ள கிளிநொச்சி மருத்துவமனைக்குஇ அவசர சிகிச்சைக்கான மருந்துகளைஇ தலைநகர் கொழும்பிலிருக்கும் இந்திய தூதரகத்தில் வைத்து நேரடியாக கையளித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள ஒரு மருத்துவ மனைக்குஇ இந்திய தூதரகம் நேரடியாக மருந்துகளை கையளித்திருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டஇ கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில்இ சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது வேறுபல நாடுகள் மருந்துகள் உள்ளிட்ட எராளமான உதவிகளை நேரடியாக செய்திருந்தபோதும்இ இந்தியா அப்போது நேரடியாக மருந்துகள் எதையும் தமது மருத்துவமனைக்கு தரவில்லை என்று தெரிவித்தார்.

இந்திய தூதரகம் வழங்கிய மருந்துகளின் விவரங்களையும்இ கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடுகள் பற்றியும் டி.சத்தியமூர்த்தி அவர்கள் தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வியில் விரிவாக விவரித்துள்ளார்.

சுட்டது லங்காசிறியிலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
கிளிநொச்சி மருத்துவமனைக்கு இந்தியா மருந்துகள்அன்பளிப்பு - by வியாசன் - 11-24-2005, 10:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)