11-24-2005, 04:02 AM
[புதன்கிழமை, 23 நவம்பர் 2005, 18:54 ஈழம்] [புதினம் நிருபர்]
சென்னை ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக சர்வதேச செய்தித்தாபனமான பி.பி.சி.யின் சென்னை செய்தியாளர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி ஆங்கில நாளேடான இந்து நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஜயந்த் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர்.
நடிகர் சாருஹாசன், கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த சுகாசினி, தமிழர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துப் பேசியதற்காக கடுமையான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சுகாசினியின் கணவர் மணிரத்னம் அண்மையில் இந்து ராமைச் சந்தித்து ஆதரவு தரக் கோரினார். இந்து ராமின் நடவடிக்கையால் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுகாசினிக்கும், குஸ்புவுக்கும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டன.
தொடர்ந்து பி.பி.சி. செய்தியாளர் டி.என்.கோபால், இந்து நிர்வாகம் ஆகியவை இணைந்து ஊடகவியலாளர்களின் இயக்கங்களை அனுமதி பெறாமல் முறைகேடாக பயன்படுத்தி சுகாசினிக்கும் குஸ்புவுக்கும் ஆதரவாக ஊடகவியலாளர்கள் இருப்பதான தோற்றத்தை உருவாக்க முனைந்தனர். அதற்கு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் ஒட்டுமொத்த எதிர்ப்புத் தெரிவித்து இரு முன்னணி நிறுவனங்களை பகிரங்க மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் செய்தி:
சென்னை பத்திரிகையாளர் சங்கம், பெண் நிருபர்கள் கூட்டமைப்பு, பத்திரிகையாளர் மன்றம், நிருபர்கள் சங்கம் இணைந்து கருத்து சுதந்திரத்துக்கான பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாக இந்து நாளேட்டில் இன்று புதன்கிழமை காலை செய்தி வெளியானது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அச்செய்தியில் இந்து முதன்மை ஆசிரியர் என். ராம், நடிகர் சாருஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தகவல் சென்னை ஊடகவியலாளர்களுக்கு தனித்தனியாக, தகவலை அனுப்பியவர் பெயரோ, கையெழுத்தோ இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன் முன்னின்று செய்துள்ளார்.
ஆனால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர்கள் அமைப்புகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அவற்றின் பெயரை பி.பி.சி. செய்தியாளர் பதிவு செய்திருந்ததால் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டம் நடைபெற இருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று திரண்டனர்.
அப்போது அங்கு வந்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலனிடம் இது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஊடகவியலாளர்களின் கடும் விசனத்துக்கு முகம் கொடுத்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன், ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் அனுமதியைப் பெறாமல் போட்டது தவறுதான். இதற்கு ராம், சாருஹாசன் கூப்பிடுவதாக ஏற்பாடு. கூட்டத்துக்கான அழைப்பு அனுப்பிவிட்டதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கூட்டம் நடத்த விடுங்கள் என்று கேட்டார். ஊடகவியலார்களின் இயக்கங்களின் அனுமதி பெறாமல் அவற்றை பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.
மேலும் இந்து நாளிதழில் 3 ஊடகவியலாளர்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டம் நடத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாகவும் கேள்வி எழுப்பட்டது.
பின்னர் ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் நிர்வாகிகள் கலைந்து செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துணையுடன் இந்து நாளேட்டினது முதன்மை செய்தி ஆசிரியர் ஜயந்த் தலைமையில் திரளான இந்து ஊழியர்கள் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்தனர்.
கூட்டம் இரத்து செய்யப்பட்ட நிலையில் இந்து ஊழியர்கள் திரண்டதை அறிந்து மேலும் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் இந்து முதன்மைச் செய்தியாளர் ஜயந்த் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.
"இயக்கங்களினது முன் அனுமதியின்றி பாரம்பரியமிக்க மிக்க ஊடகம் செய்தி போடலாமா? தவறுதானே" என்றும் அவர்கள் ஆவேசமடைந்தனர்.
அதற்கு ஜயந்த், "அனுமதியெல்லாம் கேட்டாகிவிட்டது, முறைப்படி கூட்டத்துக்கான பணத்தையும் செலுத்துவிடோம். இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவோம்" என்று பதில் கூறினார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு கடுமையாகிய நிலையில் இந்து நாளேட்டின் முதன்மைச் செய்தியாளரான ஜயந்த்தும் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அங்கு நடைபெற இருந்த கூட்டத்தையும் இரத்து செய்துவிட்டு இந்து ஊழியர்கள் புறப்பட்டனர்.
நன்றி>புதினம்

.
.
.