11-23-2005, 08:11 PM
சாமியார்கள் என்று நாம் எல்லோரையும் குறை சொல்ல முடியாது. உண்மையில் சமுதாய முன்னேற்றங்களக்காக மதங்களைக் கடந்து தொண்டாற்றிய மகான்களும் உள்ளார்கள். உதாரணமாக இந்த விடயத்தில் எனக்கு காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் காலஞ்சென்ற குன்றைக்குடி அடிகளார் போன்றோரை மிகவும் பிடிக்கும். இவர்கள் சேவைகளுக்காக இவர்களை கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் கூட மதித்தனர்.
<b>அதே போல் சமுதாயக் குறைபாடுகளை தாராளமாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனாலும் அதனைக் கௌரவமாகச் சொல்வதே சாலச் சிறந்தது. ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைப் பற்றிச் சொல்வதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக எந்த மதமும் தவறான பாதையைச் சொல்லவில்லை . அவற்றை பரப்புவோரும் சில போலிகளுமே தவறான வழிகளைக் கைக்கொள்கின்றனர். எனவே வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். எமது கருத்துக்களால் எந்த மதமக்களும் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எமக்குப் பிடிக்காத விடயங்களை நாம் மேற்கொள்ளாது விடலாம். அதே போல் அவரவர் தமது சொந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கை வைப்பதை நையாண்டி செய்யாமல் வேண்டுமானால் எமது சந்தேகங்களை அவர்களிடம் பவ்வியமாகக் கேட்டுத் தெரிந்தோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரிய வைத்தோ கொள்ளலாம். எனவே எப்போதும் நாகரீகமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வதே சாலச் சிறந்தது.</b>