11-23-2005, 05:23 PM
<b>குஷ்பு பார்த்த கொலை: சிபிஐ விசாரணை?</b>
நவம்பர் 23, 2005
சென்னை:
சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு பார்ட்டியின்போது ஒரு குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை குஷ்புவும் போலீசாரும் மறைத்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொலை நடந்தபோது குஷ்புவும் அந்தப் பார்ட்டியில் இருந்தார். ஆனால், கொலையை போலீசிடம் அவர் தெரிவிக்கவில்லை. பின்னர் குமுதம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தபோது, அந்தக் கொலைச் சம்பவம் தனது மனதை மிகவும் பாதித்ததாக குஷ்பு கூறியிருந்தார்.
இதையடுத்து குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தும் அதை போலீசுக்குத் தெரிவிக்காமல் மறைத்த குஷ்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
இந்தக் கொலையை போலீசார் ஏன் விசாரிக்காமல் விட்டார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும், மேலும் இக் கொலை குறித்து சிபிஐ அல்லது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மகாராஜன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொலை வழக்கை போலீசார் விசாரிக்காமல் மறைத்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையோ, டிஜிபி தலைமையிலான விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவையா என்பது குறித்து ஓரிரு நாளில் உத்தரவிடப்படும் என்றார்.
பின்னர் வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குமுதம் ஆசிரியர் டிசம்பர் 15ம் தேதி ஆஜராகி சாட்சியளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>