Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் வாரம்
#7
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே..."
பாடல் வரிகள் கேட்ட ஞாபகம். நினைவிலில்லை.

'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..." என்ற பாடல் மாவீரர் நாளன்று கல்லறையில் விளக்கேற்றும் போது மட்டும் இசைக்கப்படும் புனிதப் பாடல். எனவே அதனை இசைத்தட்டு வடிவிலோ இணையத்தளத்திலோ பெற முடியாது என எண்ணுகிறேன்.
நினைவில் உள்ள வரிகளை மட்டும் தருகிறேன். முடிந்தால் பின்னர் மிகுதி.


உறுதிமொழி

விருத்தம்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி


பல்லவி

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் (2)

சரணம்

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை...

வெண்ணிலா வேளையில் நெய்விளக்கேற்றியே உங்களை வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்
................................. .....தடைவரும் போதிலும் சந்ததி து}ங்காது
..................................... .............................

அடுத்த சரணம் முழுமையாக ஞாபகமில்லை. முடிந்தால் யாராவது உதவி செய்யுங்கள். இல்லையெனில் பின்னர் தருகின்றேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 11-22-2005, 08:55 AM
[No subject] - by Rasikai - 11-23-2005, 03:36 AM
[No subject] - by மேகநாதன் - 11-23-2005, 05:45 AM
[No subject] - by inizhaytham - 11-23-2005, 08:01 AM
[No subject] - by inizhaytham - 11-23-2005, 08:23 AM
[No subject] - by RaMa - 11-24-2005, 07:52 AM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 08:15 AM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 05:49 PM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 08:14 PM
[No subject] - by மேகநாதன் - 11-26-2005, 08:42 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 02:54 PM
[No subject] - by sri - 11-27-2005, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)