11-22-2005, 03:59 PM
தூயா உங்களுடைய பிரச்சனை இப்போது தீர்ந்து விட்டதா? வரவேற்பு பகுதி தலைப்பு ஒன்றில் வலைஞன் எழுதிய பதிலை படித்தீர்களா? அதனை கீழே மேற்கோள் காட்டி இணைத்துள்ளேன். ராகவா மற்றும் வலைஞன் குறிப்பிட்டபடி கருத்துக்கள் எழுதி நீண்ட நேரம் எடுத்தால் அவற்றை Notepad இல் சேமிப்பது நல்லது.
வலைஞன் Wrote:தூயா Wrote:கருத்துகள் எழுதி முடிக்க காணமல் போவது எனக்கும் நடக்குது. களத்தில் சொன்னேன்.... இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை...
வணக்கம் தூயா,
நீங்கள் சொல்வது தொழில்நுட்ப அடிப்படையிலான கோளாறைத் தானே? களத்தில் session length என்று ஒன்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக எழுதிவிட்டு அனுப்பினால் அது அனுப்பப்படாது.
யாழ் களத்தின் "session length" 3600 செக்கன்களாகும். எனவே அதற்குள்ளாக உங்கள் கருத்தை எழுதி அனுப்பவேண்டும், அல்லது உங்கள் கணினியில் உள்ள Notepad போன்ற எழுதிகளில் எழுதிவிட்டு பிறகு யாழில் இணைக்கவேண்டும்.
நீங்கள் குறிப்பிடுவதும் இதைத்தான் என்று நினைக்கிறேன். இது அல்லாது வேறேதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருந்தால் விளக்கமாக அறியத் தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

