Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும்
#9
நோர்வே, யப்பான் அமொரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் போன்றோரின் தற்போதைய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர அல்லது ஓரங்கட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்தப்போறம் என்ற கோசம் இருக்கும். மாற்றுத் தீர்வென்றை முன்வைக்காது அவர்களை வெளியேற்ற முனைந்தால் இனப்பிரச்சனை என்று ஒண்டு இல்லை என்ற மிதாவாத நிலைப்பாட்டில் உள்ளார் என்ற குறைவரும் எண்டதால் இந்தியாவை பயன் படுத்தி தற்போதை தலையீடுகளை ஓரங்கட்ட முயற்சிக்கலாம். ஏற்கனவே உள்ள தீர்வு ஒன்றை முன்னுக்கு வைத்து இந்தியாவின்ரை நப்பாசையில குளிர்காய முயற்சிக்கலாம்.

இதுவரை காலமும் மகிந்த மற்றும் அவர்களது ஜேவிபி கெல உறுமைய போன்ற கூட்டுகள் உருவாக்கி வைத்திருந்த கடும்போக்காளர் நிலைப்பாட்டோடு ஒப்பிடும் போழுது இது ஒரு இளகிய நிலையாக ஆக்கபூர்வமான ஆரோக்கியமான நம்பிக்கையூட்டு நகர்வாகச்சித்தரித்து தற்போதைக்கு காலத்தை ஓட்ட உதவும்.

புலிகள் தயார் என்றால் தான் தயார், தலைவரை நேர சந்திச்சு கதைக்கவும் தயார் என்று கலம் கடத்த விடுற வெற்றுப் பேச்சுகள் மாதிரி ஒண்டு தான் இதுவும்.

நியாயமான தீர்வு, கொளரவமான தீர்வு, அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலம் என்று பசப்பு வார்தைகளால் காலத்தை ஓட்ட முயற்சிக்கிறார். உந்தப்பசப்பு வார்த்தைகள் தேர்தல் பிரசாரத்தில எடுபடவில்லை எண்டதை கிடைத்த வெற்றியாலை உணரவில்லை போலகிடக்கு.
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 11-21-2005, 11:55 AM
[No subject] - by வியாசன் - 11-21-2005, 01:26 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by sinnakuddy - 11-21-2005, 07:34 PM
[No subject] - by kurukaalapoovan - 11-21-2005, 08:32 PM
[No subject] - by MUGATHTHAR - 11-22-2005, 08:08 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 12:17 PM
[No subject] - by cannon - 11-23-2005, 12:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)