Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூன்று இளைஞருக்கு மேலதிக நீதிவான் புதுவித தண்டனை
#1
<b>வீதி ஒழுங்கை மீறிய மூன்று இளைஞருக்கு
மேலதிக நீதிவான் புதுவித தண்டனை</b>

வீதியால் சைக்கிளில் சமாந்தரமா கச் சென்றமை, மோட்டார் சைக்கிளில் சமாந்தரமாகச் சென்றமை, ஹெல்மட் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தி யமை ஆகிய குற்றங்களுக்காக இளை ஞர்கள் மூவருக்கு யாழ்.நீதிமன்ற மேல திக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேக ரன் நேற்று புதுவிதமான தண்டனையை வழங்கினார்.
மேற்படி குற்றங்களுக்காக இளை ஞர்கள் மூவரை யாழ். பொலீஸார் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இவர்களுக்கு மேலதிக நீதிவான் வித்தியாசமான தண்டனை ஒன்றை விதித்தார்.
"சைக்களில் சமாந்தரமாகச் சென்ற இளைஞரை சைக்கிளில் சமாந்தரமாகச் செல்லாதீர்கள்' எனவும்
மோட்டார் சைக்கிளில் சமாந்தரமா கச் சென்ற இளைஞரை "மோட்டார் சைக்கிளில் சமாந்தரமாகச் செல்லாதீர் கள்' எனவும்
"ஹெல்மட்' இன்றி மோட்டார் சைக் கிள் செலுத்தியவரை "ஹெல்மட்' அணி யாமால் மோட்டார் சைக்கிள் செலுத்–தாதீர் எனவும்
அட்டைகளில் எழுதி அவற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாயிலின் முன்பாக நிற்குமாறு நீதி வான் பணித்தார்.
இதனையடுத்து இளைஞர்கள் மூவ ரும் அந்த வாசகங்களை அட்டை களில் எழுதி கழுத்தில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாயிலின் முன்னால் நின்ற தைக் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை
ஹெல்மட் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகத் தெரிவித்து நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட மேலும் சிலர் ஆயிரம் தடவைகள் "ஹெல் மட்' இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்த மாட்டேன்' என எழுதிக் கொடுத்த பின் னர் விடுவிக்கப்பட் டனர்.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மூன்று இளைஞருக்கு மேலதிக நீதிவான் புதுவித தண்டனை - by Vaanampaadi - 11-22-2005, 10:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)