Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும்
#8
இலங்கை இந்திய ஒப்பந்தம் மீள நடைமுறைபடுத்தப்படும் என புதிதாகப் பதவியேற்ற மகிந்தா கூறியிருப்பது சில சந்தேகங்களை உண்டாக்குகிறது இதற்கு முக்கிய காரணம் அவருடன் கூட்டு வைத்திருக்கும் ஜே.வி;பி ஜே.வி.பியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளின் துணையோ மத்தியஸ்தமோ இல்லாமல் எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேணும் எமது அண்டை நாடான இந்தியாவின் ஆலோசனைகள் பெறப்படலாம் ஆனால் அவர்களின் நேரடி தலையீடு இருக்கப்படாது என்பதே. . . இப்போதிருக்கும் நிலையில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதெண்றால் வடக்குகிழக்கில் அமைதி நிலவ வேண்டும் அதற்கு இந்திய அமைதிப்படையின் வருகையும் தேவைப்படலாம் ஒருமுறை வந்தடைந்த அவமானத்தை திரும்பவும் பெற இந்தியாவும் விரும்ப மாட்டாது ஆனபடியால் எமது ஜனாதிபதி வெற்றிக்களிப்பில் இந்தியாவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்துவதற்காக இப்பிடிச் சொல்லியிருக்கலாம் ஆனால் இவரின் இந்த எழுந்த மாத்தமான பேச்சுகள் இவருக்கும் ஜே.வி.பி க்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வை குழப்பவும் கூடும் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதுதான் ஜே.வி.பி இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்கப்பிடாது என தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்தவர்கள் மீறுபவர்கள் தண்டிக்கவும் பட்டவர்கள் போராட்ட காலத்தில் இருந்த ஜே.வி.பிக்கும் இப்ப இருக்கும் ஜே.வி.பிக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது ஆரம்பத்தில் புளோட் அமைப்புடன் அவர்களுக்கு இருந்த நெருக்கம் தமிழ் மக்களின் போராட்டம் சரி என கூறினவர் றோகன விஜயவீர ஆனால் இன்று விமல் வீரவம்ச என்ன சொல்கிறார் வட பகுதி மக்களை சிறைபிடித்து வைத்திருக்கிறது ஒரு ஆயதக்குழு அம்மக்களை காப்பாற்ற வேண்டுமாம்
போராடும் போது ஒரு கொள்கையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போது ஒரு கொள்கையும் பேசும் இவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்து வதற்கு உடன்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. . . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 11-21-2005, 11:55 AM
[No subject] - by வியாசன் - 11-21-2005, 01:26 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by sinnakuddy - 11-21-2005, 07:34 PM
[No subject] - by kurukaalapoovan - 11-21-2005, 08:32 PM
[No subject] - by MUGATHTHAR - 11-22-2005, 08:08 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 12:17 PM
[No subject] - by cannon - 11-23-2005, 12:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)