12-02-2003, 06:03 PM
தமிழக தொலைக்காட்சிகள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் எம்மவர்கள்தான். இந்திய சினிமாவின் தாக்கம்.. எம் புலம் பெயர் சமுதாயத்தின் தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
சின்னத்திரை தொடர்களுக்காக செலவிடும் பணத்தை... முன்பு எம்மவரின் ஆக்கப்படைப்புகளுக்கு ஊக்கம் கொடுத்திருக்கலாம். எம்மிடையே வளரத்துடிக்கும் பல கலைஞர்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஊடகங்களே பெரும் பங்கை வகிக்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழக தொலைக்காட்சிகள் எம்பிரச்சனைகளுக்கு கைகொடுக்க போவது இல்லை. அதைப்பற்றி ஆராயப் போவதும் இல்லை. எமது வளர்ச்சியை மழுங்கடிக்கவும், தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவுமே இந்த தொலைக்காட்சிகளின் ஊடுருவல் அமைந்திருக்கின்றது. அழுது வடியும் தொடர்களை பார்த்து இந்த பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள். புலம்பெயர் மண்ணில் சாதிக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. குடும்பத்தின் உறவில் கூட ஒற்றுமை குறைந்து கொண்டு வருகின்றன. குடும்பத்துடன் வெளியே உலாத்தசெல்ல முடியாத நிலை. ஓன்றாக உணவு உண்ண முடியாத நிலை என்று இப்படி பல அடுக்கிக் கொண்டே போகலாம். காலம் கடந்து சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சிகளை பகி~;கரித்த நாம் தமிழக தொலைக்காட்சிகளை ஆரம்பத்திலிருந்தே எம் எதிர்பை தெரிவிப்போம்.
தமிழக ஊடகங்களின் வரவால் நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். இது எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்.
புலம்பெயர் வாழ்வின் யதார்த்தமான நிகழ்வுகள்… நாடகங்களாக பரிணமிக்கபட வேண்டும். நேர்முக பேட்டிகள், கலந்துரையாடல்கள் இன்னும் பல நிகழ்ச்சிகள் முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த நிகழ்வுகள் எம்மவரிடையே நீங்காத இடத்தைப் பிடிக்கவேண்டும். ஐரோப்பா அரங்கில் எம் தொலைக்காட்சியையும் ஓர் சிறந்த தொலைக்காட்சியாக பரிணமிக்க வைக்க எம்மவரால் முடியும். <b>அதை நடைமுறைப் படுத்த நாம் அனைவரும் முன் வரவேண்டும். ஆதரவு வழங்குவோம்.</b>
யாரோ சிலரால் கொடுக்கப்பட்ட மாவீரர் நாள் அன்று sun tv விளம்பரங்களை அங்கு கண்ணுற்ற போது மனம் வேதனைப் பட்டது