11-22-2005, 12:37 AM
<b>மஹிந்தவின் (மாக்சிசத்திற்கு) முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள தயார் - அமெரிக்கா அறிவிப்பு </b>
செவ்வாய்கிழமை 22 நவம்பர் 2005
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை பலப்படுத்தி பேச்சு வார்த்தை மூலமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சவால் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்பாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவின் முன்புள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அவருடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;17 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்க அரசாங்கம் வாழ்த்துகின்றது. தேர்தல் தினத்தில் இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமையையும் பொறுப்பையும் உணர்ந்து அமைதியான முறையில் வாக்களித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அரசு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை எமது இரு நாடுகளுக்கும் இடையே பேணப்படும் வரலாற்று ரீதியான நெருக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னால் தற்போதிருக்கும் உடனடி சவால்களை தீர்க்கும் அல்லது எதிர் கொள்ளும் அவருடைய முயற்சியில் அமெரிக்க அரசும் அவருடன் இணைந்து பணியாற்றத்தயாராய் உள்ளது. சமாதான நடவடிக்கைகளை பலமுள்ளதாக மீளமைப்பதன் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்தி பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முக்கிய சவாலும் புதிய ஜனாதிபதிக்கு முன்பாக உள்ளது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால் வாக்களிக்கவில்லை. இது குறித்து அமெரிக்க அரசாங்கம் கவலையடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை மக்களின் ஒரு பகுதியினரின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் பறிக்கப்பட்டிருக்கின்றது.
http://www.nitharsanam.com/?art=13233

::