Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லிடத் தொலைபேசி மூலம் அனர்த்த அபாய அறிவிப்பு
#4
cell info தமிழில் வருவதற்கு network & service providers தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழீழத்தில் ஒரு காலத்தில் வரும் என் நம்புவோமாக.

cell info & cell broadcast போன்றவற்றை விளம்பரத்துக்கு பயன்படுத்துவதற்கான வாதப்பிரதி வாதங்கள் பல வருடங்களாக நடந்து ஓய்துவிட்டது. அதை தனிமனிதச் சுதந்திர மீறலாக பார்க்கிறார்கள். முக்கியமாக கேக்கமாலோயே குறுந்தகவல் சேவையில் விளம்பரங்கள் தங்கள் தொலைபேசியில் குவிவதை பாவனையாளர்கள் பொறுப்பார்களா என்ற ஒரு கேள்வி.
இதில் cell info கொஞ்சம் less intrusive ஆக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உங்கள் அகப்பெட்டிக்குள் வராதென்பதால்.

சாதாரண பாவனையாளர்கள் (தொழில்நுட்பரீதியில் அலட்டிக்கொள்ள விரும்பாதவர்களிற்கு) சொல்லிடத் தொலைபேசியினூடாக தற்போது அவர்கள் பெற்றுக்கொள்ளும் சேவைகள் (voice, sms, mms, data call) வைத்துப்பார்க்கும் போது தாங்கள் தற்போது நிக்குமிடம் யாருக்கும் தெரிந்திருக்கலாம் என்ற பிரமிப்பை தோற்றுவிக்காது. அதாவது location based services நடைமுறைப்படுத்தும் போது பலருக்கும் அதை உணர்த்தும், அதை எத்தினபேர் ஏற்றுக் கொள்கிறார்களே எண்டது அடுத்த கேள்வி.

உண்மையில் location based services நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ சேவையில் இணைந்துள்ள ஒவ்வொரு பாவனையாளரின் இடமும் அவருக்கு இணைப்பை வழங்குகிற கோபுரத்தின் இடத்தின் துல்லியமளவிற்கு எப்பொழுதும் தெரிந்திருக்கும். நீங்கள் international roaming ஒப்பந்தம் வைத்திருந்தால் வேற்று நாட்டிற்கு போயிருந்தால் அதுவும் தொரிந்திருக்கும், அங்கு எந்தக் கோபுரத்தில் இணைந்துள்ளீர்கள் என்ற அடிப்படையில்.

அமெரிக்காவில் அபாய தொலைபேசி (911) அழைப்பை ஒருவர் மேற்கொண்டால் உதவிகள் தாமதமின்றி உரிய இடத்திற்கு சென்றடை இணைப்பிலுள்ள எந்த நேரமும் பாவனையாளர் உள்ள இடத்தை குறிப்பிட்ட அளவு துல்லியத்தில் காட்ட வேண்டிய கட்டாயம் (FCC regulation E911)அமுலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் வந்தது.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 11-16-2005, 09:13 PM
[No subject] - by poonai_kuddy - 11-20-2005, 11:33 PM
[No subject] - by kurukaalapoovan - 11-21-2005, 05:29 PM
[No subject] - by அருவி - 11-21-2005, 06:34 PM
[No subject] - by RaMa - 11-22-2005, 06:46 AM
[No subject] - by Thala - 11-22-2005, 10:28 AM
[No subject] - by அருவி - 11-22-2005, 10:57 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 11:57 AM
[No subject] - by Thala - 11-23-2005, 12:04 AM
[No subject] - by RaMa - 11-23-2005, 12:38 AM
[No subject] - by Thala - 11-23-2005, 12:59 AM
[No subject] - by kurukaalapoovan - 11-23-2005, 01:22 PM
[No subject] - by அருவி - 11-24-2005, 10:31 AM
[No subject] - by அருவி - 11-24-2005, 10:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)