11-21-2005, 04:18 PM
நெடுந்தீவில் இரு சிறிலங்கா கடற்படையினர் காணாமல் போயுள்ளனர்.
யாழ். தீவகம் நெடுந்தீவில் கடத்தப்பட்ட இரு சிறிலங்கா இராணுவத்தினரை மீட்பதாகக் கூறி பாரிய தேடுதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம்இ காவல்துறையினர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 10 தமிழ் இளைஞர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
இன்று திங்கட்கிழமை காலை முதல் நெடுந்தீவுக்கு 4 உலங்குவானூர்திகளில் பெருமளவில் சிறிலங்கா கடற்படையினர் இறக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நெடுந்தீவில் டபிள்யூ.பி.பி. நந்தசிறீ என்பவர் உள்ளிட்ட இரு சிறிலங்கா கடற்படையினர் காணாமல் போயுள்ளனர்.
இரு கடற்படையினரும் நேற்றிரவு காணாமல் போயுள்ளனர். இரு கடற்படையினரும் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த கடற்படையினரைத் தேடுவதாக சிறிலங்கா கடற்படையினரும் காவல் துறையினரும் நெடுந்தீவில் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்திவருகின்றனர்.
இன்று பகல் 4 முறை உலங்குவானூர்திகளில் கடற்படையினர் கொண்டு சென்று இறக்கப்பட்டு தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது வீடுகளில் இளைஞர்கள் படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று மாலை வரை 10-க்கும் அதிகமான இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பிரதான வீதியில் மகாவித்தியாலயத்திலிருந்து மருத்துவமனை வரையான பகுதிகளுக்கான போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.
இதற்குள் இருக்கும் மகாவித்தியாலய மைதானத்தில்தான் உலங்குவானூர்திகள் இறங்குகின்றன.
கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள்ளேயே கடற்படை முகாமும் ஈ.பி.டி.பி.யின் முகாமும்இ சிறிலங்கா காவல் நிலையமும் அமைந்துள்ளன.
நெடுந்தீவு மாவலித்துறையில் மாவீரர் நினைவுப்பந்தல் அமைப்பதில் மக்கள் ஈடுபட்டபோது அதனைத் தடுக்க முனைந்த படையினர் மக்களை அச்சுறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் இரு இளைஞர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் இரு கடற்படையினர் காணமல் போனதாகக் கூறி அங்கு இராணுவ நடவடிக்கையாகவே தமது செயற்பாடுகளை இன்று மேற்கொண்டுள்ளனர்.
கடற்கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவு மக்கள் குறிகாட்டுவானுக்கு போக்குவரத்து செய்ய படகு சேவை நடைபெறத் திட்டமில்லாத போதும் கூட படகுப் பயணத்துக்கு படையினர் தடுத்துள்ளனர்.
நெடுந்தீவில் தற்போதைய போர் நிறுத்த காலத்திலேயே கடற்படையினர் முகாமமைத்தனர்.
இப்போது அங்கு பெரும் நெருக்கடி நிலையை அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர்.
சுட்டது லங்கபசிறியிலிருந்து

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]