11-21-2005, 02:53 PM
Selvamuthu Wrote:கொற்றவையே வணக்கம். வருக.
கெட்ட ஆவி என்றபோது நன்றி சொன்னீர்
கொட்டாவி என்றார். அமைதியானீர.
கொற்றவை என்றார் அழகாக.
இனிமையான பெயர்தான்.
கோலத் தமிழ்ப்பெயர்களை கொலைசெய்ய வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் போதும் கொலை தானாகவே விழும். இவையெல்லாம் தேவைதானா? தமிழைத் தமிழாக எழுதுங்கள். உயிரெழுத்துக்களின் முன்னர் "ஓர்" என்று கட்டாயம் எழுதவேண்டும் என்றும் "ற்" இற்கு அடுத்ததாக "க்" போடக்கூடாது என்றும் அடிக்கடி களத்திலே குறிப்பிட்டேன். ஆனால் கள உறவுகளில் சிலர் இப்போதும் அவற்றைத் தவறாகவே எழுதுகிறார்கள். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவறின்றி எழுதப்பழகுங்கள்.
நன்றி.
யாரைச் சொல்கின்றீர்கள். சுட்டிக்காட்டினால் நல்லாயிருக்கும்.
[size=14] ' '

