11-21-2005, 12:15 PM
சிலர் தங்கள் பலவீனங்களையும் தவறுகளையுமே தங்களின் பலமாகவும் சிறப்பாகவும் மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள். கண்ணதாசன் இதில் மகாகெட்டிக்காரன்.
"ஒருவன் எப்படியெப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்.
ஆகவே
இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது"
என்று அவர் சொல்லிவிட்டு எல்லாருக்கும் போதனை செய்கிறார். எப்பிடியிருக்கிறது அவரது தத்துவம்?
அதுவும் அவரது அர்த்தமுள்ள இந்துமதம் படித்தால் சமூகம், பெண்கள் தொடர்பிலான அவரது அபத்தமும், கோணங்கித்தனமும் புரியும்.
நிற்க, நாரதர் எழுதியது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஈழவன் சொல்லித்தான் அது விமர்சனமென்றே தெரிகிறது. நாரதர் கொஞ்சம் கவனியுங்கள்.