Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும்
#1
<b>இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும்</b>

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ

இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்பட்டு அது முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்‌ஷ இணையத்தளமொன்றுக்கு சில நிமிட தொலைபேசிப் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியிலேயே, 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்பாட்டிற்கு மீண்டும் புத்துயிரளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

இதுபற்றி ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் இலங்கை தொடர்ந்தும் மிகவும் நெருங்கிய உறவுகளை கொண்டிருப்பதுடன் இனப்பிரச்சினைத் தீர்விலும் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்விலும் இந்தியாவின் வழிகாட்டுதலை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்னைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், சகல விடயங்களிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்குமெனவும் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேநேரம், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் ஆற்றிய உரையில், ஆசிய நாடுகளுக்கு முன்னுரிமையளித்து அந்த நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் நெருங்கிய உறவை வைத்திருக்கப் போவதாகக் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் சந்திக்கவுள்ளார்.

இதற்கான விருப்பத்தை இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தச் சந்திப்பு இன்று திங்கட்கிழமை அல்லது நாளை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இலங்கை- இந்திய உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படும் - by Vaanampaadi - 11-21-2005, 11:41 AM
[No subject] - by Birundan - 11-21-2005, 11:55 AM
[No subject] - by வியாசன் - 11-21-2005, 01:26 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:11 PM
[No subject] - by sinnakuddy - 11-21-2005, 07:34 PM
[No subject] - by kurukaalapoovan - 11-21-2005, 08:32 PM
[No subject] - by MUGATHTHAR - 11-22-2005, 08:08 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 12:17 PM
[No subject] - by cannon - 11-23-2005, 12:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)