11-21-2005, 09:45 AM
சிறிலங்காவின் புதிய பிரதமராக ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று திங்கட்கிழமை காலை 11.39 மணிக்கு புதிய அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றார்.
1960 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க, 1962 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.
களுத்துறை மாவட்டம் ஹொரணை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 1965 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
1977 ஆம் ஆண்டு அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் 2000 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராகவும் இவர் கடமையாற்றினார்.
அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பௌத்த சாசன அமைச்சராகவும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களின் நியமனம் இன்று மாலை இடம்பெறுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதினம்

" "