11-21-2005, 05:08 AM
Vasampu Wrote:ஆதிபன்
கட்டுரையாசிரியர் முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதவில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் தெரிந்ததை மறைத்து சில ஊடகங்களிலுள்ள தனது தனிப்பட்ட கோபங்களை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார். உதாரணமாக சண் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் மாலைமுரசு போன்ற பத்திரிகைகளின் விளம்பரத்தில் அப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியை விளம்பரமாக்கினார்கள். இதிலென்ன தவறு. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் தோல்வியடைந்த போது அதனை சுப்பர் ஸ்ராரின் மருமகன் மண்ணைக் கவ்வினாரென குமுதம் தலையங்கமிட்டது. இவையெல்லாம் விளம்பரயுக்தியே.
அப்படி எல்லாச்செய்திகளையும் அவர்கள் விளம்பரப்படுத்தினால் பறுவாய் இல்லை. அவர்கள் தமக்கு எதிரானவர்கள் பற்றிய செய்தியைத்தான் அடிக்கடிவெளியிடுவார்கள். தங்கள் ஆட்கள் தவறுசெய்தால் அது பற்றி மூச்சும் விடமாட்டார்கள். அரசியல் எதிரிகளைப்ற்றிய செய்திகளைச் சுனாமிக்கு அறிவிப்புச்செய்ததுபோல் தொடர்ந்து அறிவிப்புச்செய்யவேண்டிய அவசியமில்லை. சன்டிவியிலும் சிறப்புச்செய்தியிலும் குங்குமம் இதழுக்கான விளம்பரத்திலும் தொடர்ந்து விளம்பரம்படுத்த அது நெருப்புப்போல பத்திக்கொண்டது. நீங்கள் மற்றய தொலைக்காட்சிகளையும் சன் தொலைக்காட்சியையும் பார்த்தால் இது புரியும். ஜெயாடிவியும் இதுபோலத்தான். அவர்களும் எதற்கும்குறைந்தவர்கள் அல்ல. தொலைக்காட்சி போன்றபெரிய ஊடகங்கள் அரசியல்வாதிகளிடம்; மாட்டிக்கொண்டதால் நடுநிலைமை இன்றி அவர்கள் செய்திவெளியிடுகிறார்கள். உண்மைகள் இலகுவாகத்திரிக்கப்படுகின்றன. நாட்டிற்கு அவசியமானதைவிட்டுவிட்டு தங்கள் அரசியலுக்கு அவசியமானதை முக்கியமாக்கி மக்களை திசைதிருப்புகிறார்கள்.

