11-21-2005, 05:06 AM
Vaanampaadi Wrote:ரணில் அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு உடன்படிக்கைகள் என்று போட்டு புலிகளைப்பணிய வைக்க மறைமுக முயற்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிவார்Thala Wrote:உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது...
அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது ....
காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி......
அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா....
இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா....
மேலும் தீர்வுகளை அற்ற, மக்கள் இப்போதும் அடிமைப்படுத்தப்படுகின்ற வாழ்வை வைத்துக் கொண்டு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்பது ஏற்புடையாதாக இல்லை. சிங்கள பேரினவாதத்தின் மேலாதிக்கத்தின் கீழ் வாழ விரும்பியிருந்தால் இவ்வளவு யுத்தம் ஒன்றும் தேவையிருக்காது. நாம் விரும்புவது எமது உரிமைகளைத் தவிர, அவன் போடும் பிச்சைகளை அல்ல.
[size=14] ' '

