11-20-2005, 08:23 PM
ஜெயரத்ன இலங்கையின் புதிய பிரமராவார் என்று தெரிகிறது
இலங்கையின் அடுத்த பிரதமராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.எம். ஜெயரத்ன நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை மாலை பிரதமர் பதவிப் பிரமாணமும் புதிய அமைச்சரவை தெரிவும் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது அதிகாரங்களையும் பொறுப்புகளையும் எதிர்வரும் புதன்கிழமை நடக்கும் விசேட வைபவமொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கவிருக்கிறார்.
அன்றைய தினமே ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் சந்திரிகா வெளியேறுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நேர்மையான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தும், அப்பகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக நிராகரித்தமைக்கு எதிராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் நீதிமன்றம் செல்ல ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்துவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.