11-20-2005, 07:02 PM
thiru Wrote:Quote:அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது ....
காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி......
அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா....
இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா
சமாதானத்தைக் காட்டிலும் போரும் இல்லாத சமாதானமும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலை தமிழரின் போராட்ட மன உறுதியைக் குலைக்கும் என்று கணக்குப்போட்டுக் காய் நகர்த்தியவர்தான் ரணில்.
சிறிலங்காவின் வரலாற்றை நன்கு அவதானித்தீர்களானால் நிறைவேற்று அதிகாரம் கூட பௌத்த பிக்குகளின் காலில் விழுந்த கதைகளை நீங்கள் காணலாம்.
தனது பேரினவாதத் தன்மையை மாற்றிக்கொள்ள எத்தனித்த சந்திரிகா அம்மையாரின் தந்தையும் அப்போதைய பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது புத்த பிக்கு ஒருவர்தான் என்பதை நீங்கள் அந்த வரலாற்றிலே படித்தறிய முடியும்.
அந்த வேளையிலே இந்தியாவைப் போல பிரதமர் கையில்தான் அதிகாரம் இருந்தது.
பின்னர் வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தான் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதிப் பதவியை உருவாக்கினார்.
ரணில் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து சமாதான வேடமிட்டதே இந்த சனாதிபதித் தேர்தலை மனதில் வைத்துத்தான்.
அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார்.
ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை.
இந்தத் தேர்தலிற்கு முன்னர் நடந்த பல்வேறு பேரப்பேச்சுகள் குறித்து இனித் தகவல்கள் வெளியாகும். அப்போது சலுகைகளை நம்பி இலட்சியத்தை விட்டுக்கொடுக்காத ஈழத்தமிழ்த் தலைமை குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள்.
இறுதியாக ஒன்று
வெள்ளையன் செக்கில் இட்டு இழுத்தபோதும், தனிச் சிறையில் இட்டுத் துன்புறுத்தியபோதும் அதுகண்டு மனம் தளராது விழ விழ எழுந்த உங்களது பாட்டனும் பூட்டனும் அந்த அரச ஒடுக்குமுறைக்கு அஞ்சித் தமது எதிர்ப்பைக் கைவிட்டிருந்தால் இன்றும் எமது தந்தையர் நாடு பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாகத்தான் இருந்திருக்கும்.
எனவே விடுதலைப் போராட்டம் என்பது வரித்துக்கொண்ட இறுதி இலக்கை அடையும்வரை அல்லது கௌரவமான வாழ்வு தமிழருக்குக் கிடைக்கும்வரை ஓயாது. ஓயக்கூடாது.
இடையில் வரும் இந்தச் சமாதானங்கள் சண்டை நிறுத்தங்கள் எல்லாம் எமது நீண்ட பயணத்தின் இளைப்பாறும் கூடங்கள்.
காந்தியடிகள் எப்படி மாறி மாறி பேச்சுவார்தைகள் போராட்டங்கள் சட்ட மறுப்புகள் என்று மாறி மாறிப் போராடினாரோ அதுபோலவே நாமும் போராடுகிறோம்.
அவர் வெள்ளையர் முதலில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு அல்லது அவருக்கு அவர்கள் காட்டிய ஆசைவார்த்தைகளுக்கு மயங்கிக்கொண்டு விடுதலைப் போரை நிறுத்தியிருந்தால் இன்றைக்கு மகாத்மாவாக ஆகியிருக்கமாட்டார். அவரது மக்களும் விடுதலை பெற்றிருக்க மாட்டார்கள்.
போராட்ட வடிவம்தான் வேறே தவிர அரச ஒடுக்குமுறையோ அல்லது மக்கள் தற்காலிகமாக இழக்கும் சுகங்களோ இந்திய சுதந்திரப் போரிலும் எமது தாயக விடுதலைப் போரிலும் ஒன்றுதான்.
தங்களது எழுத்துகளில் போரினால் ஈழத்துச் சகோதரர்கள் இன்னலுற நேருமே என்ற ஏக்கம் தொனிப்பது நன்கு புலப்படுகிறது.
தங்களது இந்தப் பாசம் ஒன்றே எங்களுக்கு உரமளிக்கும்.
இழப்புகள் எமக்குப் புதியவையல்ல. போர் எமது மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. இனிப் போர் தொடங்கினால் அதுவே இறுதிப் போராக இருக்கட்டும் என்பதே எமது மக்களின் விருப்பம்.
புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்
<b>திரு</b>
அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார்.
ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை.
<b>*** தணிக்கை - வலைஞன்</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

