Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்
#1
ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்

<img src='http://img10.imageshack.us/img10/4049/theaviatorbigposter6ip.jpg' border='0' alt='user posted image'>

இந்த ஆண்டு வெளி வந்த கொலிவூட் படங்களில் குறிப்பிடத்தக்கது.மார்டின் ஸ்கொர்சினால் நெறிப்படுத்தப்பட்ட ,விமானவியலாளரான கார்வார்ட் கெயுசுன் வாழ்க்கை வரலாற்றை அடியோற்றி எடுக்கப் பட்ட காலப் படம்.யார் இந்த கார்வார்ட் கெயுஸ், அமெரிக்காவில் டெக்சாசில் எண்ணை வர்த்தகத்தில் ஈட்டிய வருமானத்தில் ,பல கோலிவூட் படங்களை எடுத்து பின்னர் அமெரிக்க விமானப்படைக்கு தேவயான விமானங்களை வடிவமைத்து, பல வான் பறப்பு சாதனைகளைச் செய்து,விமானச் சேவை நிறுவனத்தை உருவாக்கி ஆரம்பகால கண்டங்களுக் இடயேயான பயணியர் விமான சேவை நிறுவனங்களைத் தொடக்கிய ஒரு கலவை மனிதர்.இவர் அந்தக் காலத்தில் அதாவது 1920 - 1940 காலத்தில் கோலிவூட்டை ஆட்டிப் படைத்த ஒரு எம் ஜீ ஆர்.இவர் பல நடிகைகளை தனது நாயகியாகவும் வைத்திருந்தார்.சில வேளைகளில் அதி கூடிய சுத்தத்தை பேணும் ஒரு மன நோயளராகவும் இருந்தார்.இவ்வாறு ஒரு கலவயான குணா அம்சத்தை உடய மனிதரின் கதை அந்தக்காலத்தை பிரதிபலிப்பதாக மிகவும் தொழில் நுட்ப நேர்தியுடன் எடுக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இதில் அமெரிக்க வர்தகர்க்கும் ,அமெரிக்க அரசியலாளர்கள் அதாவது செனட்டர்களுக்குமான தொடர்பு மற்றும் அந்தக் காலத்தில் கொம்யுனிஸிட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நிகழ்ந்த மக்காத்தி படு கொலைகள் ,அமெரிக்க கொலிவூட்டில் பெண் நடிகைகள் நடத்தப்படும் விதம் எனப் பல விடயங்கள் சொல்லப் பட்டிருப்பது,அமெரிக்காவைப் பற்றிய உண்மைகளை இன்றய நிலயில் எமக்கு அறியவைகின்றது.அமெரிக்க வர்த்தகம்,அரசியல் அனைத்துமே போர்களோடு பின்னிப்பிணைந்தது என்பது இன்றும் நிதர்சனமாகவே இருப்பதை இந்தப் படம் எமக்கு நினைவூட்டுகிறது.
Reply


Messages In This Thread
ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம் - by siluku - 11-20-2005, 06:53 PM
[No subject] - by poonai_kuddy - 11-20-2005, 11:30 PM
[No subject] - by siluku - 11-21-2005, 09:34 PM
[No subject] - by Mathan - 11-22-2005, 04:55 PM
[No subject] - by sabi - 11-23-2005, 11:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)