Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய ரஷியா
#1
சோவியத் யூனியனில் இருந்த 15 நாடுகளில் மிகப்பெரியது ரஷியா. உலக அரங்கில் சோவியத் யூனியனுக்கு இருந்த அரசியல், பொருளாதார, ராணுவ முக்கியத்துவம் இப்பொழுது ரஷியாவுக்கு வழங்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரத்து அதிகாரம் (வீட்டோ பவர்) கொண்ட நிரந்தர உறுப்பினராகவும் உள்ளது. பல கட்சிகளைக் கொண்ட தேர்தல் முறையை பின்பற்றுகிறது.

வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை முழுமையாக ஒழித்த முதல் சமூகமாக விளங்கியது சோவியத் யூனியன். கல்வியறிவை உலகிலேயே மிக அதிக அளவில் எட்டிய, குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிந்த நாடாக இருந்தது. பெண்கள் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சியில் சிகரங்கள் எட்டப்பட்டன. மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தி அதற்காக அதிக பணம் செலவிடப்பட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உணவுக்காக குழந்தை விபசாரம் நடைபெறும் நாடாக சீரழிந்தது ரஷியா. பணவீக்கம் வானத்தில் பறக்க பொருளாதாரம் நிலைகுலைந்தது. தற்போது ஓரளவுக்கு நிலைத்தன்மை மீட்கப்பட்டிருந்தாலும் இன்றளவும் அடையாளச் சிக்கலில் இருந்து மீளமுடியாத சமூகமாகவே இருக்கிறது. சோவியத் ஆட்சி முறை கோரி போராட்டங்கள் அதிகரித்துள்ளன. செசன்ய தேசிய இனப் பிரச்சினையும் முக்கிய சிக்கலாக உள்ளது.

பரப்பளவு-1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் (1,70,75,200) சதுர கிலோமீட்டர்கள்; மக்கள் தொகை 14.34 கோடி (14,34,20,309); தலைநகர்-மாஸ்கோ; மொழி-ரஷியன்; நாணயம்-ரஷியன் ரூபிள்; எழுத்தறிவு-99 சதவீதம்.

ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது ரஷியா. அஜார்பைஜான், பெலாரஸ், சீனா, எஸ்தோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், வடகொரியா, லாத்வியா, லித்துவேனியா, மங்கோலியா, நார்வே, போலந்து, உக்ரேன் ஆகிய நாடுகள் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மேற்கே யூரல் மலைத்தொடர், மத்தியப் பகுதியில் வெர்கொயான்ஸ், கிழக்குப் பகுதியில் கொலிமா மற்றும் காம்செட்கா மலை, தெற்கே ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பகுதி அமைந்துள்ளன. வடபகுதி பனி மூடிய ஆர்க்டிக் கடற்கரை சமவெளி பகுதியாக அமைந்துள்ளது. கடுங்குளிரான காலநிலை நிலவும் நாடு ரஷியா.

பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு, மரம் மற்றும் மரத்தாலான பொருள்கள், வேதிப்பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோதுமை உள்ளிட்ட தானியங்கள், சர்க்கரைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள், சூரியகாந்தி பயிராகின்றன. இரும்புத்தாது, நிலக்கரி, கச்சா எண்ணெய், பிளாட்டினம், தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகியவை ரஷியாவின் முக்கிய கனிம வளங்கள்.

நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்திரங்கள், விண்கலங்கள், விமானங்கள், கப்பல் கட்டுதல், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள், டிராக்டர்கள், வேளாண் எந்திரங்கள், கட்டுமான கருவிகள், மின்உற்பத்தி சாதனங்கள், மருத்துவ, அறிவியல் கருவிகள், நுகர்பொருள்கள் தயாராகின்றன.
ThanksBig Grininamani..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
இன்றைய ரஷியா - by SUNDHAL - 11-20-2005, 06:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)