12-02-2003, 11:23 AM
யாரும் யாராயும் கட்டளையிடவில்லை. கஞ்சா நல்ல சமான் தான் அடிச்சா மணியா இருக்கும், பாதிப்பு கன நாளைக்கு பிறகு தெரியும். தாயகத்தில் சினிமாவை தடைசெய்த படியால் தான் இப்ப ஓரளவு நல்ல படங்களை எடுக்கினம். அதிலை ஏதும் நீங்கள் பார்தீங்களோ எண்டதும் எனக்கு சந்தேகம் தான். புலிகளின் கட்டுப்பாடு இல்லாத பகுதி மினிசினிமாவில் காட்டின படங்கள், அங்கு நடை பெற்ற கூத்து இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கு. சல விடயங்களில் தடை தேவைதான். இது நம்ம நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலும் இருந்தது. 70களில் 80கநிலும் பை இந்தியன் பீ இந்தியன் எண்ட தடை இருந்தது தெரியுமோ! அதாவது இந்திய பொருட்களேயே வாங்குங்கள், இந்தியனாக இருங்கள் எண்டு. இப்ப அவை முன்னேறீட்டினம் மற்றைவையை கெடுக்கினம். அவ்வளவுதான். இந்தியாவில் நம்மவர்களை முன்னுக்கு வர விடுவார்களா என்று அங்கு போய் முயற்சித்தவை சொன்ன கதைகளை கேட்ட பின்தான் தடையை நானும் நியாயப்படுத்துகிறேன். போய் ஒருக்கா முயற்சித்துட்டு வாங்கோ பிறகு புரியும்!

