11-20-2005, 12:48 PM
நமது சமூகத்தில் நடக்கின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சமூகப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் பங்கு வகிக்கிறார்கள். பரப்புரைகளில் அகிம்சை வழிப்போராட்டங்களில், வன்முறை வழிப் போராட்டங்களில் என எல்லா முறைகளிலும் அனைத்துத் தளங்களிலும் (வீடு, தோட்டம், தொழிற்சாலை, அலுவலகம், தெரு போர்முனையில்....) பெண்களின் பங்களிப்பு பிரசன்னப்படுகிறது.
இப்போராட்டங்கள், நிலைகளில் பெண்ணுரிமைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகள், கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன. சில நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பெண், ஆணுக்கு எல்லா நிலைகளிலும், தளங்களிலும் சமமானவள் என்றளவில் அவள் விடுதலை அடையும் சுதந்திரத்தை முழுமையாக உழைப்பிலும் அறிவிலும் அனுபவிக்கும் சமூக வாய்ப்புகள் இன்னும் உருவாகவில்லை.
மேற்கண்ட சமூக ஒடுக்கு முறைகளுக்கும் நிறுவன அதிகாரங்களுக்கும் எதிராக சமத்துவம் வேண்டிப் போராடும் ஆண்கள் கூட, பெண்களின் முழுநிலையிலான சமத்துவக் கோரிக்கைகளை உள்வாங்க முடியாதிருக்கின்றனர். பெண்ணிலைவாதியான ஆண்களாக தம்மை வெளிப்படுத்துவதில் அச்சப்படுகிறார்கள். அந்தளவுக்குப் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல், அதிகாரம், ஆதிக்கம் என்பவற்றை தங்களின் எதார்த்த வாழ்வில் அனுபவிக்கின்றனர். ஆண்கள் தங்களின் குடும்ப, சமூக வளர்ச்சிக்கும் நலன்களுக்கும் இணையான பெண் உரிமைச் சீர்திருத்தங்களை, சமூகப் போராட்டங்களில் வாழ்வியல் அதர்மக் கோட்பாடுகளில் இடைச் செருகுவதற்கு அப்பால், முழுமையான பால்நிலைச் சமத்துவம் நோக்கி நகர முடியாது. சமூகப் போராட்டங்களிலேயே சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை, கருத்தியல்களைத் தாண்ட முடியாமல் தத்தளிக்கும் ஆண்களிடம் அவர்கள் பால் நிலைச் சமத்துவத்தை பற்றிச் சிந்திக்கவில்லை. பெண்களின் சீர்திருத்த உரிமைகளுக்கும் அப்பால் விடுதலை சமத்துவம் நோக்கி அழைத்துச் செல்லவில்லை எனக் குற்றம் சுமத்த முடியாது.
அடக்கப்பட்ட மக்களின், ஆண்களின் நலன் சார்ந்து வரலாறு பூராக போராடிப் போராடி, பால்நிலைச் சமத்துவத்தைக் காணாத பெண் விடுதலை பெறாத பெண்ணினம், தற்காலத்தில் தன்னிலை உணர்ந்து விட்டது முதல் பெண்ணிலைவாதம் வரை ஆரம்பித்துவிட்டது.
பால்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளில் ஆழமான பார்வைகளை வெளிப்படுத்தி வருகின்றன. வாழ்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் பால்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் இடையில் இருந்துவரும் முரண்பட்ட கருத்தியல்களை, கண்ணோட்டங்களை மேட்டுக்குடிப் பார்வைமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. வாழ்வியல் சமத்துவக் கோட்பாடுகளுக்குள் ஒரு முரணற்ற அறிவியல் பார்வை வளர்க்கப்படுகிறது.
இந்நூலின் முற்பக்க அட்டையில் போடப்பட்டுள்ள காலடிச் சுவடுகளைப்போல், அறிவுநிலை வளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் பெற்ற பெண்ணிலைவாதிகள் ஆணாதிக்க கருத்தியலுக்கும் நடைமுறைக்கும் எதிராக ஒரு இடையறாத பால்நிலைச் சமத்துவம் கோரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு நிலை வெளிப்பாடுதான் இந்நூல் வெளியீடும் நிகழ்ச்சியுமாகும் என நம்புகிறேன்.
நிறுவன மயப்படுத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக ஒருகையில் ஆயுதங்களையும் நிறுவன மயப்படுத்தப்பட்ட ஆண் ஆதிக்க ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு எதிராக மறுகையில் பேனாவையும் தாங்கி, பால்நிலைச் சமத்துவம் வேண்டி உலகப் பெண்கள், தமிழ்ப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுதானே நிதர்சனம்!
இந்நூலின் முதல் ஆய்வுக் கட்டுரையானது,
"ஆண்,பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கண ரீதியானதா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா?"
சமூகவியல் நோக்கிலான இவ்விமர்சன ஆய்வை செய்திருப்பவர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளரான செல்வி உதயகலா அய்யாத்துரை என்பவர்.
இக்கட்டுரை மையப்படுத்தியுள்ள ஐந்து(5) அம்சங்களைக் குறிப்பிட்டார்.
இன, மத, மொழி, நாட்டு,தேச எல்லைகளுக்கு வெளியே பெண்-ஆண் உடல்ரீதியில் உயிரியல் அமைவில் பால்ரீதியில் ஒரே மாதிரி உள்ளனர். பண்பாடுகளின் அடிப்படையில்தான் வேறுபடுகின்றனர்.
பால் அடிப்படையில் அமைந்த தொழிற்பாகுபாடு(Sexual Division of Labour) இரண்டு நிலைகளில் செயற்படுகிறது.
1. உடற்கூறு அடிப்படையில் தொழிற்பாகுபாடு.
2. பண்பாட்டு அடிப்படையில் தொழிற்பாகுபாடு.
பொருளாதார ரீதியில் உற்பத்தித் திறன்மிக்க உழைப்பும், வெளி உழைப்பில் ஆணின் பங்கும் இதில், பணப்பெறுமதியுள்ள உழைப்பு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு என பிரித்தறியப்படுகிறது.
குடும்பத்தைப் பற்றிய ஆய்வாளர்கள், உளவியல் குறித்த ஆய்வாளர்கள், மானிடவியலாளர்கள், சமூகவியலாளர்களின் கண்ணோட்டங்கள், தர்க்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
உலகளவில் 224 சமூகங்களை ஆய்வுக்குட்படுத்திய ஜோர்ஜ் பீற்றர் மேடக் (George peter murdock) இன் தொழிற்பாகுபாட்டிற்கு உயிரியல் வேறுபாடு காரணம் என்ற விளக்கமும், அதே சமூக ஆய்வைக் கொண்டு பிரித்தானிய சமூகவியலாளரான ஆன் ஒக்லி(Ann Oakely) தொழிற்பாகுபாட்டிற்குப் பண்பாட்டு வேறுபாடே பிரதான காரணம் என்ற பார்வையையும் குறிப்பிடத்தக்கவை.
எர்னஸ்ரைன் பிறேடில் (Ernestine Friedl), செறிபி.ஓட்னர் Sherry B.Ortner இயற்கையான தொழிற்பிரிவு சிந்தனைகளும், தொழிற்பாகுபாட்டிற்கும், ஆணாதிக்கத்துக்குமான உறவுகளை விளக்கும் தரவுகளும் உள்ளன.
தொழில்களிலே மிகவும் கடினமான, நுணுக்கமான சிறிது அலட்சியம் கூட அகால மரணத்தை ஏற்படுத்தி விடக்கூடிய யுத்தத் தொழிலில், பெண்களின் சமகால பங்களிப்பைக் காட்டி, தொழிற்பாகுபாட்டிற்குக் காரணம் உடல் ரீதியான வேறுபாடா? பண்பாட்டு வேறுபாடா? என்பதை ஆய்வாளர் நூலின் வாசகர் கைகளில் ஒப்படைத்துள்ளார்.
நூலின் இரண்டாவது ஆய்வுக்கட்டுரை " பால்நிலை அடுக்கமைவு" ஒரு மானிடவியல் நோக்கு என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. பகீரதி ஜீவேஸ்வராவின் இக்கட்டுரையின் குறிப்பான ஐந்து (5) அம்சங்களைக் கவனித்தால்:
நூலின் மூன்றாவது ஆய்வுக் கட்டுரை, "பண்பாடு, குடும்பம், பெண்ணிலைவாத முரண்பாடுகள்" ஜானகி சங்கரப்பிள்ளையின் இக்கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பார்க்கையில்,
சமயம், சட்டம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் இவற்றின் மரபு மற்றும் நவீனக் கருத்தமைவுகளில் ஆணாதிக்கத்தைக் கோடிட்டு காட்டுகிறது. பண்பாட்டின் பங்கு உச்சநிலையடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
மேற்கத்திய, கிழக்கத்திய பெண்களின் பொதுப் பிரச்சினைகள், தனித்துவமான பிரச்சினைகள். மேற்கத்திய, கிழக்கத்திய குடும்பங்களின் நிலை, குடும்ப நிறுவனத்தின் பலம்-பலவீனம் பேசப்படுகிறது. பெண்ணிலை வாதத்துக்கு எதிரான தடைகளும் சுட்டப்படுகிறது.
கீழைத்தேச குடும்ப அமைப்பு, மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக, கிராமப் புறம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் பொருளாதார நிலை, சமூகநிலை, பாலியல் நிலை குறித்து விரிவாகத் தொகுத்துக் காட்டப்படுகிறது.
கல்விகற்ற, வேலை செய்யும் பெண்களின் வேலை நேரங்கள், உழைப்பு முறைகள், பட்டியலிடப்பட்ட முறையில் காட்டப்படுகிறது. கலாசாரம் - பண்பாடு என்ற பெயரில் குடும்ப நலன் என்பதூடாகவும் ஆண்களின் நலனே மீண்டும் மீண்டும் பேணிப் பாதுகாக்கப்படுவதை குடும்ப நிறுவனச் செயற்பாடு ஊடாக வெளிப்படுகிறது. கல்வி கற்ற பெண் வேலைக்குச் செல்லும், பணம் சம்பாதிக்கும் பெண்களின் பிரச்சினைகளை கேள்விக்குள்ளாகியுள்ளது.
தீவிர பெண்ணிலைவாதம், சோசலிச பெண்ணிலை வாதம் பற்றிய சிறு குறிப்பும், இருபால் - எதிர்பால் உறவுக்குப் பதிலான ஓரினச்சேர்க்கையை நிராகரிக்கப்படுகிறது. பால்நிலை விழிப்பு, பால்நிலை சமத்துவம் ஏற்பட ஒன்பது வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
http://www.thinakural.com/New%20web%20site...0/Article-9.htm