Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனாதிபதியும் பொம்மலாட்டமும்
#1
திரு.வேலுப்பிள்ளை பிரபகாரனால் வழங்கப் பட்ட இலங்கை சனாதிபதியென்னும் பதவியில் அமர இருக்கும் மகிந்தர் படப் போகும் பாடு பற்றி ஒரு அலசு அலசுவோம்.

இன்றய பதவியேற்பு நிகழ்வில் என்ன சொல்லி இருகிறார் மகிந்தர்,

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனது அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தாங்கள் தயாரென விடுதலைப் புலிகள் அறிவித்ததும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

சமாதான நடவடிக்கைகளில் பங்கேற்க வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அத்துடன் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்கு தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

கொலை, கடத்தல், ஆட்சேர்ப்பு இவற்றைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஒருவருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவான ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

அதாகப் பட்டது இதுவரை காலமும் நடந்த,செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் என்றும் , நோர்வே வெளியேற்றப் பட்டு இந்தியா உள் நுளைக்கப் படும் என்பதுவே இந்த அறிவிப்பின் சாரம்.இதே நேரத்தில் புலிகள் ரணிலைத் தோற்கடிக்க வைத்ததன் மூலம் நோர்வையையும் அதன் பின் உள்ள அமெரிக்கவையும் சமாதான நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றியமை ஆனது அமெரிக்க அரசை சினங்கொள்ள வைத்துள்ளது.இதனயே ராசித சேனாரட்வை ,'பிரபாகரனைப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கூற வைத்துள்ளது.

மேற் குறிப்பிட்ட கூற்றானது பிரபாகரனின் காய் நகர்த்தல்களை புரிந்தவர்களுக்கு இலகுவாக விளங்கக் கூடிய ஒன்று.மேன்மைதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான புற நிலைகளை அரசியல் ரீதியாக சிறீலங்காவில் உருவாக்கி விட்டுள்ளதை இவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாதது, இவர்கள் சிக்கி இருக்கும் பொவுத்த இனவாத சாக்கடை ஆனது இவர்களின் கண்களைக் கட்டிப் போட்டிருப்பதனால் ஆகும்.

ஒரு மதி நுட்பமான தளபதி தனது எதிராளிகளைக் கொண்டே தனது இலக்குகளை அடைவதற்கான புற,அக நிலைகளை உருவாக்கி விடுகிறான் என்பது கீழ் உள்ள பிம்ப உருவாக்கம் கட்டுரையை வாசித்தால் இலகுவில் புரியும்.

வரலாற்றை உருவாக்குபவர்கள் வரலாற்று நாயகர்கள்,மற்றெல்லோரும் அதில் சிக்குண்டு அள்ளுப் படும் பொம்மைகள், அனைத்து அதிகாரமும் உடய இலங்கை சனாதிபதி மகிந்தரும் இதில் அடக்கம்.
Reply


Messages In This Thread
சனாதிபதியும் பொம்மலாட்டமும் - by narathar - 11-20-2005, 12:06 PM
[No subject] - by MUGATHTHAR - 11-20-2005, 01:18 PM
[No subject] - by narathar - 11-22-2005, 11:08 AM
[No subject] - by MUGATHTHAR - 11-22-2005, 11:23 AM
[No subject] - by kurukaalapoovan - 11-22-2005, 01:55 PM
[No subject] - by narathar - 11-22-2005, 02:01 PM
[No subject] - by Mathan - 11-26-2005, 03:06 AM
[No subject] - by narathar - 12-03-2005, 12:06 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)